ஒருபாலீர்ப்புடைய ஆண்கள் விழாவில் 29 பங்கேற்பாளர்கள் எச்ஐவி பாசிட்டிவ்
- kumara885
- Oct 31, 2025
- 1 min read

ஒருபாலீர்ப்புடைய ஆண்கள் விழாவில் 29 பங்கேற்பாளர்கள் எச்ஐவி பாசிட்டிவ்
ஜக்கார்த்தா - இங்கு கிழக்கு ஜாவா பிராந்தியத்தில் உள்ள சூராபாயாவில் நடைபெற்ற உகவர் அல்லது ஒருபாலீர்ப்புடையா ஆண்கள் விழாவில் 34 ஆண்கள் கைதாகியுள்ளனர்.
இதில் அதிர்ச்சிக்குறிய விஷயம் என்னவென்றால் அவர்களில் 29 பேருக்கு எச்ஐவி பாசிட்டிவ் உறுதியாகியுள்ளது என்று திரிபுன்நியூஸ் இணைய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் ஙாகெலில் உள்ள ஒரு தங்கும் விடுதி அறையில் கைதுசெய்யப்பட்டதாக கோத்தா சூராபாயா சுகாதார அலுவலகத் தலைவர் நானிக் சுக்ரிஸ்தினா கூறினார்.
"அந்த 34 ஓரினச்சேர்க்கை ஆண்களும். சுகாதார சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவர்களில் 29 பேருக்கு எச்ஐவி பாசிட்டிவ் என கண்டுபிடிக்கப்பட்டது.
"அதுமட்டுமின்றி அவர்களில் பெரும்பாலோர் புறநகர்களில் இருந்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது," என்று மேலும் சொன்னார்.
அவர்களின் மருத்துவ கண்காணிப்புக்காக சுகாதார அலுவலகம் கோத்தா சூராபாயா காவல் துறையுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளதாக உறுதிபடுத்தினார்.
கடந்த சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட அந்த திடீர் சோதனையின் போது கைது ஹோட்டல் அறையினுள் சம்பந்தப்பட்ட ஆண்கள் அனைவரும் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் பிறந்தமேனியாக இருந்ததாக சூராபாயா மக்கள் சேவை போலிஸ் தலைவர் மூத்த உதவி ஆணையர் எரிக்கா பூர்வானா புத்ரா கூறினார்.
" அந்த ஓரினச்சேர்க்கை விழாவில் பக்கேற்ற ஒவ்வொரு ஆண்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர், சமூக ஊடக நிர்வாகி,சமூக ஊடகங்கள் வழி குழுப் பதிவாளர் என பொறுப்புகளை வைத்துள்ளனர்.
" மேலும் அறுவர் ஓரின சேர்க்கை உறவில் பெண்களாக செயல்படுகின்றனர்," என்று மேலும் சொன்னார்.





Comments