top of page

காணாமல் போன மூதாட்டி உயிரற்ற உடலாக கால்வாயில்

kumara885
Nov 2, 2025
1 min read
மாயமான மூதாட்டி பிணமாகக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டார்
மாயமான மூதாட்டி பிணமாகக் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டார்

பாகான் டத்தோ- மூன்று நாட்களுக்கு முன்பு காணமல் போனதாகக் கறுதப்பட்ட மூதாட்டி ஒருவர் நேற்று உயிரற்ற பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.


ஹலிமா இட்ரீஸ் என்று அடையாளம் கொண்ட அந்த 77 வயதுடைய பெண்மணியின் உடல் ஹுத்தான் மெலிந்தாங்கில் உள்ள கம்போங் தெலுக் கெர்டு வாழைத்தோப்பிலுள்ள கால்வாயினுள் கிடந்ததாக பேராக் மாநில தீயணப்புப் படையின் இடைக்கால உதவி இயக்குனர் ஷாஸ்லின் முகம்மது ஹனாஃபியா உறுதிபடுத்தினார்.


"ஊதாட்டியின் உடல் காலை மணி 10.50க்கு மீட்டுப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு, காவல் துறை பொது தற்காப்புப் படை மற்று கே9 மோப்ப நாய்களைக் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார்..


இதற்கு முன், அந்த மூதாட்டி கடந்த அக்டோபர் 28ஆம் நாள் முதல் வீட்டுக்கு திரும்பாமல் இருந்ததை அடுத்து குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.


"இறந்த மூதாட்டிக்கு ஞாபக மறதி பிரச்சனையும் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.


"அவர் காணாமல் போன முதல் நாளில் நான்கு கிலோமீட்டர் சுற்றளவுக்கு தேடும் பணிகள் முடக்கிவிடப்பட்டன. அதில் நான்கு அமலாக்கத்துறையும் கிராமத்து மக்களும் பங்கெடுத்தனர்.


"அவ்வகையில் சனிக்கிழமை காலை வேலையில் அம்மூதாட்டி இறந்த நிலையில் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டார்," என்று மேலும் கூறினார்.


அவரது உடல் பிரதேப் பரிசோதனைக்காக காவல் துறையிடம் ஒப்படைகப்பட்டுவிட்டதாக அவர் சொன்னார்.


Comments


bottom of page