top of page

கென்யாவில் விமான விபத்து, 11 பயணிகள் பலி

  • kumara885
  • Oct 29, 2025
  • 1 min read

கென்யாவில் விமான விபத்து, 11 பயணிகள் பலி


நைரோபி -நேற்று இங்கு நிகழ்ந்த விமான விபத்தில் அதில் பயனம் செய்த பயணிகள் அனைவரும் பலியானதாக அஞ்சப்படுகிறது.


பலியானவர்களில் 10 பயணிகள் சுற்றுலா சென்றவர்கள் என்று நம்பப்படுகிறது.


சம்பவத்தின் போது மொம்பாசா ஏர் சபாரிக்குச் சொந்தமான அந்த இலகு விமானம் குவாலே கௌண்டியில் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.


அதில் பயணம் செய்த என்மர் ஹங்கேரியைச் சேர்ந்தவர்க என்றும் மற்ற இருவர் ஜெர்மனியர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.


" வேதனைக்குரிய விஷயம் என்னவேன்றால் இக்கோரவிபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை," என்று அறிக்கை ஒன்றில் அந்நிறுவனம் கூறியுள்ளது.


மீட்புப் படையினர் சம்பவம் நடந்த இடத்தில் சடலங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த கோர விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தீவிரமாக விசாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் மேலும் கூறியது.


கென்யா வான் போக்குவரத்து இலாகா உட்பட செம்பிறைச் சங்க தன்னார்வலர்களும் தற்போது அங்கு சேவையில் ஈடுபட்டுள்ளனர்.


Comments


bottom of page