top of page

கோழி இறைச்சிக்காக திருமண வீட்டார் சண்டை

  • S.KUMARA
  • Nov 7, 2025
  • 1 min read
கோழி இறைச்சிக்காக களவரத்தில் இறங்கிய திருமண வீட்டார்
கோழி இறைச்சிக்காக களவரத்தில் இறங்கிய திருமண வீட்டார்

உத்திர பிரதேசம் - இங்குள்ள பிஜ்நோர் மாவட்டத்தில் மகிழ்ச்சியாக நடைபெற வேண்டிய திருமண நிகழ்வு ஒன்று கலவரத்தில் முடிந்தது அவ்வட்டார மக்களிடையே பீதியைக் கிளப்பியது.


சம்பவம், பொறித்த கோழி இறைச்சிக்காக மாப்பிள்ளை வீட்டாருக்கும் பெண் வீட்டாருக்கும் சண்டை மூண்டதாக உள்ளூர் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இருவீட்டார் சொந்தங்களும் பொறித்த கோழி இறைச்சியை பறிமறும் போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளது.


இரு வீட்டார் சொந்தங்களுக்கிடையே ஏற்பட்ட சிறிய வாய்ச்சண்டை இறுதியில் பெரிய கலவரத்தில் முடிந்த வேளையில் இரு தரப்பினரும் குத்திக்கொண்டனர்.

இந்த சண்டையில் நிறைய பெண்களும் குழந்தைகளும் சிக்கித் தவித்ததாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.


“திருமண வைபவத்தைக் கொண்டாடி மகிழ இந்ங்கு நாங்கள் வந்தோம், ஆனால் இங்கு சூழ்நிலையே சண்டையாக மாறியதால் யாரும் சரியாக விருந்தோம்ப முடியாமல் போனது,” என ஒரு விருந்தினர் வருத்தப்படுக்கொண்டார்.


அச்சப்பவத்தில் இருதய நோயாளியான ஒருஆடவர் உட்பட நிறைய புறமுகர்கள் காயத்துக்குள்ளாகி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.


மீண்டும் சண்டை மூளாமல் இருக்க சம்பவம் நிகழ்ந்த இடத்துகு விரைந்த போலிசார் திருமணத்தை தங்களின் கட்டுப்பாட்டில் சிறப்பாக நடத்தித் தந்தனர்.

Comments


bottom of page