top of page

காவல் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை உதைத்த 2 இளைஞர்கள் கைது

  • kumara885
  • Oct 27, 2025
  • 1 min read

காவல் அதிகாரியின் மோட்டார் சைக்கிளை உதைத்த 2 இளைஞர்கள் கைது


கோலாலம்பூர் - ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் அதிகாரியின் இரு சக்கர வண்டியை உதைத்ததோடு அவர் கீழே விழுந்து காயம் விளைவித்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.


இந்த அடாவடித்தனத்தைப் புரிந்த அவ்விரு இளைஞர்ளும் 13 வயதுடையவர்கள் என்று தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் பஹாங் தெமெர்லோவில் இன்று பின்னிரவு வேளையில் நிகழ்ந்துள்ளதாக தெமெர்லோ மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் முகம்மது நஷிம் பாஹ்ரொன் கூறினார்


"சம்பவத்தின் போது காவல் உடையில் இருந்த அதிகாரி ரோந்தின்போது இளைஞர்கள் கூட்டமாக வங்கியோரம் சட்டவிரோத மொட்டர் சைக்கிள் பந்தயத்திற்கு ஆயத்தமாக இருப்பது கண்டு அவர்களை நெருங்கியுள்ளார்.


சுமார் 23 வயதுடைய அதிகாரியைக் கண்டதும் அவர்கள் ஓட்டம் எடுத்துள்ளனர்.


"காவல் அதிகாரி உடனே வாகன எண் பட்டை இல்லாத கருப்பு நிற மோட்டார் சைக்கிள் ஒன்றை துரத்திச் சென்று நிருத்தும்படி எச்சரிக்கை ஒலியையும் ஒளியையும் எழுப்பி கட்டளையிட்டுள்ளார்.


ஆனால், அவர்களில் ஒருவன் காவல் அதிகாரியின் மோட்டார் சைக்கிள் சக்கரத்தை எட்டி உதைத்தால் அவர் கீழே விழுந்ததும் அவ்விளைஞன் தப்பி ஓடிவிட்டான்," என்று தமது அறிக்கையில் கூறினார்.


இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கை கால்களில் காயத்துக்குள்ளாகி தெமெர்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இச்சம்பவத்தை அடுத்து காவல் துறை உடனடியாக அவ்விரு இளைஞர்களை வேட்டையாடும் முயற்ச்சியில் ஈடுபட்டது.


அதன் விளைவாக பிற்பகல் 2.30 மணியளவில் 13 வயதுமிக்க அவ்விரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் என உறுதிப்படுத்தினார்.


மேலும் அவர்கள் பயன்படுத்திய இரு மோட்டார் சைக்கிள்களையும் காவல் துறை சீல் வைத்தது நடவடிக்கை எடுத்ததாகக் கூறினார்.


Comments


bottom of page