top of page

கழுத்து அருபட்ட சிறுவனின் பெற்றோரை போலிசார் கைது

  • kumara885
  • Oct 29, 2025
  • 1 min read

கழுத்து அருபட்ட சிறுவனின் பெற்றோரை போலிசார் கைது


கோலாலம்பூர் - நேற்று முன்தினம் ஆறு வயது சிறுவன் ஒருவன் கழுத்து அருபட்ட சம்பவத்தில் போலிசார் தற்போது சந்தேகத்தின் பேரில் அச்சிறுவனின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர்.


சுமார் 41 வயதுடைய அத்தம்பதியினர் இருவரும் நேற்று மதியம் 4 மணிக்கு மாவட்ட காவல் துறை வளாகத்தில் கைது செய்யப்பட்டதாக பத்து பாஹாட் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் ஷாருலானுவார் முஷாடாட் அப்துல்லா உறுதிப்படுத்தினார்.


அச்சிறுவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் என்று போலிஸ் சந்தேகிப்பதால் அவனது பெற்றோர் தற்போது விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.


சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையைப் பெற்று வரும் அச்சிறுவனின் நிலை சீராக தற்போது இருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.


"அந்தப் பாலகன் நன்றாகத் தேறி வருகிறான்... தற்போது நன்றாக பேசுகிறான்.


"நாங்கள் விசாரணை அறிக்கையை பூர்த்தி செய்து விரைவில் துணை பொது வழக்கறிஞரிடம் தொடர் நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்படும் என்றார்.


Comments


bottom of page