செக்ஸ் யோகசன வகுப்பு நடத்தியதாக சுற்றுப்பயணியை தாய்லாந்து போலிஸ் கைது
- S.KUMARA
- Nov 6, 2025
- 1 min read

பேங்காக் - பிரிட்டனைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவர் செக்ஸ் அடிப்படையிலான யோகாசன வகுப்பை நடத்தியதாக தாய்லாந்து போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அந்த பெண்மணி உள்நாட்டு உணவகத்தில் இச்செயலைச் செய்ததாக தாய்கெர் எனும் உள்நாட்டு செய்தி ஊடகம் அறிவித்துள்ளது.
தந்த்ரா யோகா எனும் வார வகுப்பு குறித்த சுற்றறிக்கையை முகநூல் பயனீட்டாளர் ஒருவர் கண்டு போலிசாரிடம் புகார் கொடுத்ததும் கம்போங் 8இல் தாய்லாந்து காவல் துறையினர் திடீர் சோதனை நடத்தியுள்ளனர்.
அந்த சுற்றரிக்கையானது ஒவ்வொரு செவ்வாய் மாலை 4.30 மணிக்கு நடத்தப்படும் தாந்த்ர யோகசனம் செக்ஸ் செயல் அடங்கியுள்ளதோடு ஒவ்வொரு பங்கேற்பாளர்களுக்கும் தலா 400 பாஹ்ட் அல்லது ரிம50 விதிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட அம்மாதுவின் பெயர் 40 வயதுடைய மரியா என்று அடையாளம் கொண்ட அப்பெண் அவ்வகுப்பை நடத்திகொண்டிருந்தபோது சுற்றுலா போலிஸ் தலைமையில் கைதானாள்.
மரியா முறையான பயணக் கடப்பிதழையும் வேலைக்கான பெர்மிட்டையும் கொண்டிருந்தாலும், அவள் உண்மையில் தங்கும் விடுதி நிர்வாக நிறுவனத்தின் பயனீட்டாளர் தொடர்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments