top of page

சோஸ்மா குற்ற பின்னனியுடைய ஆடவர் கொலை சம்பவத்தில் மூவர் கைது

  • S.KUMARA
  • Nov 14, 2025
  • 1 min read


ஷா ஆலாம் – மூன்று நாட்களுக்கு முன்பு புக்கிட் திங்கி கிள்ளானில் உள்ள ஓரு பெட்ரோல் நிலையத்தில் சோஸ்மா குற்றப் பின்னனியுடைய நபர் ஒருவர் காருக்கு பெட்ரோல் நிரைப்பிக்கொண்டிருந்த போது அடையாளம் தேரியாத ஆசாமிகளால் குட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் மூன்று ஆடவர்களைக் கைது செய்துள்ளனர்.


இந்தப் புதிய தகவலை, சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசெலி இன்று தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.


சுமார் 19 முதல் 35 வயதுடைய அந்த மூன்று ஆடவர்களில் இளைஞரும் ஒருவர் என்றும் அவர்கள் அனைவரும் கிள்ளானில் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.


அம்மூவரும் தற்போது எதிர்வரும் னவம்பர் 17 ஆம் நாள் வரை தடுப்புக் காவலில் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


"தற்போது போலிஸ் இச்சம்பவத்தை செக்ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரணை செய்து வருகிறது.


குற்றம் நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்.


“விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால் நாங்கள் தற்போது எதையும் பகிர இயலாது, விசாரணை அனைத்து கோணங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது என்பது நான் இங்கு சொல்ல முடியும்.


"ஈதுவரை இறந்தவரின் மனைவி, குடும்பம் உட்பட மொத்தம் 7 பேரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டு தவல் பெற்றது," என்றார்.


Comments


bottom of page