சபா சட்டமன்றத் தேர்தல்: 12 சட்டமன்ற தொகுதிகளில் பாஸ் போட்டியிடும்
- kumara885
- Oct 21, 2025
- 1 min read

கோத்தா பாரு- எதிர்வரும் 17ஆவது சபா மாநிலத் தேர்தலில் பாஸ் மொத்தம் 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் என்று அக்கட்சி உறுதிபடுத்தியது.
அவற்றில் அக்கட்சி குறைந்தது ஒரு சட்டமன்றத்தையாவது வெற்றி கொள்ள நம்பிக்கைக் கொண்டுள்ளது என்று அதன் உதவித் தலைவர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா கூறினார்.
தற்போது அக்கட்சி பெர்சத்துவுடனும் இதர கூட்டணி கட்சியிடமும் கலந்தாலோசித்து வருவதாகக் கூறினார்.
" நாங்கள் 12 சட்டமன்றங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம்.
"அதில் ஒரு சட்டமன்றத்தையாவது வெற்றி கண்டால் அது கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்," என்று மேலும் கூறினார்.





Comments