சபா தேர்தல்: சுமார் பத்தாயிரம் போலிசார் கடமையில் ஈடுபடுவர்
- kumara885
- Nov 4, 2025
- 1 min read

தாவாவ் - எதிர்வரும் இம்மாதம் 29ஆம் துகதி நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்ன்றத் தேர்தலில் சுமார் 10,000 போலிசார் களத்தில் கடமையாற்றுவார்கள்.
அவர்கள் வேட்பாளர் அறிவிப்பு நாளான 15ஆம் திகதி தொடங்கி தேர்தல் எந்த அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வர் என்று உள்துறை அமைச்சர் செனட்டர் டத்தோஶ்ரீ சைபுடின் சசுத்தியோன் இஸ்மயில் தெரிவித்தார்.
சரவாக் மாநில காவல் படையினரும் கூடுதல் பாதுகாப்பு சேவைக்கான தேவை ஏற்பட்டால் தேர்தல் களத்தில் இறங்குவர் என்றார் அவர்.
"இதனிடையே சபா தேர்தலை முன்னிட்டு அதிகாரிகள் அனைவரது பிடுமுறைகளும் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது என்றார்.
"சபா மாநில காவல் படைத் தலைவரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி தகவல் வழங்கினார்.
"அமைதியான ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய அனைவரும் தயார் நிலையில் இருக்கின்றனர்," என்று அவர் மேலும் சொன்னார்.
அவ்வகையில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பிரச்சாரத்தில் பங்கேற்கவுள்ள அரசியல் கட்சிகளும் நேர்மையான ஜனநாயக முறையில் நடந்துகொள்வர் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.





Comments