சபா தேர்தல்: தேசிய முன்னணி 41 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டி
- S.KUMARA
- Nov 10, 2025
- 1 min read

கோத்தா கினாபாலு - எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் 17ஆவது சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி மொத்தம் 41 தொகுதிகளில் களம் காண்கிறது.
நேற்று இரவு அம்மாநிலத்தின் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஶ்ரீ புங் மொக்தார் ராடின் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை தேசியமுன்னணியின் தலைவர் டத்தோஶ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையில் அம்னோ கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தேசிய முன்னணி சபா மாநிலத் தேர்தலில் அதன் பாரம்பரிய அடையாளமான தராசு சின்னத்தில் போட்டியிடும்.
"பல கட்ட பேச்சுவார்த்தை, ஆய்வு மற்றும் கலந்தாலோசனைக்குப் பின் சபா தேசிய முன்னணி கட்சியின் பொறுப்பை ஏற்று மாநிலத் தேர்தலில் போட்டியிட பல்ல இளமையான துடிப்புமிக்க வேட்பாளர்களை களத்தில் போரிட தேர்வு செய்துள்ளது.
"பல அனுபவம், மக்கள் சேவையில் சிறந்த அடைவுநிலை கொண்ட வேட்பாளர்களும் துடிப்புமிக்க அதேவேளையில் விவேகமான உயர்கல்வி தேர்ச்சிமிக்க வாலிபர்களையும் தேர்வு செய்துள்ளது.
"மக்களின் நலனையும் நல்வாழ்வையும் முன்னிருத்தி சேவையாற்ற இவர்கள் அனைவரும் வேட்பாளர்களாக இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
"இதில், 30 விழுக்காடு வேட்பாளர்கள் இளம் வாலிபர்கள் என்பதால் இளம் வாக்காளர்களின் குரலைப் பிரதிநிதிக்கும் முக்கிய அம்சமாக அவர்களுக்காக பொருளாதாரம் சீரமைப்பு, வேலை வாய்ப்பு, நவீன மேம்பாடு அகியவற்றில் தேமுவின் அக்கறையைக் காட்டுறது," என்று புங் மொக்தார் கூறினார்.
அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பாலான வேட்பாளர்களில் இளங்கலை, முதுகலை மற்றும், முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளாவர். மேலும் அவர்களில் இருவர் மருத்துவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
"படித்த இளையோர்களை வேட்பாளர்களாக அறிமுகப்படுத்துவது, அறிவில் சிறந்த, முதிர்ச்சியான, மக்களின் வாழ்வினை முன்நோக்கி கொண்டுசெல்லக்கூடிய பக்குவமும் திறமையும் படைத்தவர்களையே தேசிய முன்னணி முன்னிறுத்தியுள்ளது," என்றார்.





Comments