top of page

சபா தேர்தல்:பிந்தாசான் தொகுதியில் போட்டியிட பண்டிகார் அமின் விருப்பம்

  • kumara885
  • Oct 27, 2025
  • 1 min read
பண்டிக்கார் அமின் மூலியா
பண்டிக்கார் அமின் மூலியா



கோத்தாகினபாலு- எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் பிந்தாசான் தொகுதியில் போட்டியிட முன்னாள் சபாநாயகர் டான்ஶ்ரீ பண்டிக்கார் அமின் மூலியா விருப்பம் தெரிவித்துள்ளார்.


சபா மக்கள் ஒருங்கிணைந்த கட்சியின் துணைத் தலைவருமான அவர், தமது வயது என்றுமே இதற்குத் தடையில்லை என்றார்.


மேலும் பிந்தாசான் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளரை தீர்மாணிக்கும் தமது பங்கினை ஜிஆர்எஸ் கூட்டணி சீர்தூக்கிப் பார்க்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


மேலும், தம்மால் மக்களுக்கு தொடர்ந்து சிறப்பாக சேவையாற்ற முடியும் என்றும் அதற்கு வயது ஒரு தடையே கிடையாது என்று சூளுரைத்துள்ளார்.


"ஒவ்வொருவரும் கண்டிப்பாக ஒருநாள் வயது மூப்பினை அடைவர்.


"எனக்கு வயது கடந்திருந்தாலும் என்னால் இன்னும் மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று நம்புகிறேன், அதனால் இம்முறை பிந்தாசான் தொகுதியில் நானே வேட்பாளராக களமிரங்க எண்ணம் கொண்டுள்ளேன்.


"நான் வயதானவன் என்று சிலர் சொல்கிறார்கள் ஆகவே இளையோர்கள் நீங்கள் முதியவர்களை திட்டாதீர்கள் காரணம் நீங்களும் ஒருநாள் வயது மூப்பினை அடைவீர்கள்.


"ஆகவே. இது விளையாட்டல்ல, நான் உண்மையாகவே பிந்தாசான் சட்டமன்றத்தில் போட்டியிட விரும்புகிறேன்," என்றார்.


அதுமட்டுமல்லாமல் அக்கூட்டணி இன்னும் தொகுதி பங்கீடு குறித்து எந்த ஒரு தீர்க்கமான முடிவுக்கும் வரவில்லை என்று உறுதிபடுத்தினார்.


Comments


bottom of page