சபா தேர்தல் வேட்பாளர்கள் தயவு செய்து புறக்கணிப்பு செயலை தவிருங்கள் - தேமு
- kumara885
- Nov 2, 2025
- 1 min read

சபா தேர்தல் வேட்பாளர்கள் தயவு செய்து புறக்கணிப்பு செயலை தவிருங்கள் - தேமு
கோலாலம்பூர் - சபா மாநில தேர்தலுக்கான தேசிய முன்னணி வேட்பாளர்கள் பட்டியல் அறிப்பு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள வேளையில் கட்சி தலைமையின் முடிவை அம்மாநில அம்னோ உறுப்பினர்கள் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வேட்பாளர்கள் தேர்வு விவகாரம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் முடிவுகள் அனைத்தும் சபா மற்றும் மத்திய அம்னோவின் ஆலோசனையின் படி எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறையின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அஹ்மாட் மஸ்லான் கூறினார்.
"எவரேனும் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
"தயவுசெய்து கீழருப்பு அல்லது புறக்கணிப்பு வேளைகளில் ஈடுபட வேண்டாம் காரணம் அஃது கட்சிக்கே பெரும் இழப்பைக் கொண்டுவரும்." என்றார்.
அனைத்து கோணங்களில் நன்கு ஆராய்ந்த பிறகே வேட்பாளர்கள் தேர்வு குறித்த முடிவு எடுக்கப்படுள்ளதாக அவர் மேலும் கூறினார்.





Comments