சபா மாநில சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் 29 நவம்பர் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
- kumara885
- Oct 17, 2025
- 1 min read

கோத்தா கினாபாலு, அக்டோபர் 16 - சபா மாநில 17ஆவது சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் நவம்பர் 29-ஆம் தேதி நடைபெறும்.
இந்தத் தகவலை தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஶ்ரீ ரம்லான் ஹருன் இன்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதற்கிடையே முன்வாக்குப் பதிவு நவம்பர் 25ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட வேளையில் வேட்பாளர் பதிவு நவம்பர் 15ஆம் நாள் நடைபெறும் என்றும் உறுதிப்படுத்தினார்.
இதற்கு முன் கடந்த வாரம் அக்டோபர் 6ஆம் நாள் சபா சட்டமன்றம் களைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் அத்தகவலை மாநில சட்டப்பேரவை சபாநாயகரிடமிருந்து பெற்றதாகக் கூறினார்.





Comments