சபா மாநில தேர்தலில் வெற்றியை இளம் வாக்காளர்கள் நிர்ணயிப்பர்
- S.KUMARA
- Nov 8, 2025
- 1 min read

கிமானிஸ் - ஒவ்வொரு வேட்பாளர்களின் வெற்றியை இம்முறை சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கும் முதிர்ச்சிபெற்ற இளம் வாக்காளர்கள் முடிவு செய்வர்.
எந்த ஒரு கட்சியையும் சாராமல் நடுநிலையாக முடிவெடுக்கும் திறமையைக் கொண்டுள்ள இன்றைய இளம் வாக்காளர்கள் தற்போது சிந்தித்து செயல்படும் நிலையில் தெளிவாக இருப்பதாக தேசிய முன்னணி உதவித் தலைவர் டத்தோஶ்ரீ முகமட் ஹஸ்ஸான் நம்பிக்கைத் தெரிவித்தார்.
"தற்போதைய இளைஞர்கள் திறந்த மனப்பக்குவமும் எதிர்காலத்தை முன்னிருத்தி சிறந்த முடிவை எடுக்கும் பக்குவம் படைத்தவர்களாக இருக்கின்றனர், முன்பு போல கட்சி விசுவாசம் கொண்டிருக்கவில்லை.
"அவர்கள் எந்த ஒரு கட்சியுடனும் பற்று கொண்டிருக்கவில்லை. கடந்த 15ஆம் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி அதிக தோல்வியைச் சந்தித்ததற்கு இளம் வாக்காளர்களே காரணம்.
"ஆனால், நெங்கீரி, ஆயர் கூனிங், பெலாங்காய் ஆகிய சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிக இளம் வாக்காளர்களின் ஆதரவும் ஓட்டும் தேசிய முன்னணிக்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது," என்றார்.
"நமது அதிக பெரும்பான்மையான வெற்றி கிட்டியது இளம் வாக்காளர்களின் ஓட்டுதான் மூல காரணம்," என்று மேலும் கூறினார்.
இளம் வாக்காளர்களின் ஆதரவு என்பது அவர்கள் தற்போதைய அரசாங்கம் அவர்களின் எதிர்காலத்தை முக்கியத்துவம் அளிப்பதை கட்டுகின்றது.
மேலும், அன்மையில் சில சட்டமன்ற தொகுதிகளுக்கு பயணம் மெற்கொண்ட போது பூத்தாத்தான், மெம்பாக்குட் பொங்காவான்ன் ஆகிய பகுதிகளில் தேசிய முன்னணியின் தேர்தல் கேந்திரம் அதிக உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்,"என்றார்.





Comments