top of page

சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை

  • S.KUMARA
  • Nov 11, 2025
  • 1 min read
சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை
சபா மாநிலத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை

கோலாலம்பூர் - எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் மூடா கட்சி போட்டியிடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.


இத்தகவலை இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் சபா மாநில மூடா தலைமை உறுதிபடுத்தியது.


மாறாக, இந்த தேர்தலில் மூடா எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்காமல் நடுநிலை தீர்மானத்தை எடுத்துள்ளது.


சபா மூடா கட்சி இம்முறை வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு உள்ளூர் அல்லது தேசிய அரசியல் கட்சிக்கோ ஆதாரவு வழங்காது எனும் முடிவுக்கு வந்துள்ளது.


"சட்டமன்றங்களில் போட்டியிடவிருக்கும் எல்லா வேட்பாளருக்கும் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


"இந்த ஜனநாயக அரங்கு நேர்மையுடனும் உண்மையுடனும் கொண்டாடப்படும் என்று மூடா நம்புகிறது.


"ஒவ்வொரு வேட்பாளரும், கடமை, கண்ணியம் மற்றும் கட்டுப்பாடுடனும் போட்டியிடுங்கள், பண அரசியல் அல்லாமல் உங்களின் பொதுஅறிவு, முதிர்ச்சியான சிந்தனை ஆற்றலை பறைச்சாற்றும் வாக்குறுதிகளை மக்களிடத்தில் வையுங்கள்.


" அவர்கள் மனிதநேயமிக்க வாழ்வாதார உயர்வுக்கும் உழைக்கத் தயாராக இருக்கும் நல்ல இளம் தலைவர்களை வரும் தேர்தலில் தேர்ந்தெடுக்கட்டும்," என்று அவ்வறிக்கை மேலும் கூறியது.


"சபா மக்களே, உங்கள் ஓட்டு உரிமையை விவேகமாகப் பயன்படுத்தி உங்கள் எதிர்காலத்தை முன்னிறுத்தி நல்ல தலைவர்களைத் தேர்வு செய்யுங்கள்," என்று மூடா நினைவூட்டியது.


மேலும், இந்த ஓவ்வொரு ஓட்டும் சபாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கியமான ஒன்றாகும், அஃது நம் அனைவரது தலையாய பொறுப்பும் கூட என்று மூடா பரைச்சாற்றியது. மலேசியாடுடே

Comments


bottom of page