சவுதி காற்பந்து லீக்கில் விளையாட கோல் மன்னன் மெஸ்ஸிக்கு அனுமதி மறுப்பு
- kumara885
- Nov 1, 2025
- 1 min read

சவுதி அரேபியா - குறுகிய தவணைக்காக 2026ஆம் உலகக் கிண்ண காற்பந்துக்கான முன்னேற்பாடாக சவுதி புரோ லீக்கில் விளையாட விருப்பம் தெரிவித்த அர்ஜென்டினா கோல் மன்னன் லியோனல் மெஸ்சியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
மாஹ்ட் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைமை நிர்வாகி அப்துல்லா ஹம்மாட் இதனை உறுதிப்படுத்தினார்.
அமேரிக்காவின் மேஜர் சோக்கர் லீக் நீண்ட ஓய்வு ஆரம்பமாவதால் மெஸ்சி சவுதி அரேபியா கிளப்பில் இணைந்து தற்காலிகமாக அங்கு விளையாட விண்ணப்பம் கொடுத்த மெஸ்சியின் பிரதிநிதி தொடர்பு கொண்டதாக அப்துல்லா ஹம்மாட் கூறினார்.
“மேஜர் சொக்கர் லீக் நான்கு மாதங்களுக்கு ஓய் எடுக்கப்போவதால் மெஸ்சியின் குழு என்னைத் தொடர்பு கொண்டது.
"மெஸ்சி உலகக் கின்னத்திற்கு முன்னேற்பாடாக தன்னை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள அராப் லீக்கில் விளையாட விருப்பம் கூறினார்.இதற்கு முன்னர் டேவிட் பெக்கம் 2010ஆம் ஆண்டில் இதே வழியைப் பின்பற்றி விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
"ஆனால், நான் மெஸ்சியின் வேண்டுகோளை ஒதுக்கிவிட்டேன், காரணம் இதர போட்டிகளுக்காக, முன்னேற்பாட்டுக்கென தங்களை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள விளையாடுவதற்கு அரேபிய லீக் இடம் தர முடியாது.
எங்களின் சௌடி புரோ லீக் என்பது அதற்கென ஒரு மரியாதை மவுசு உள்ளது, அதனை சீற்குலைக்க அனுமதிக்க முடியாது," என்றார்.





Comments