ஜோக்கோவிக்கு பயப்படவில்லை, அவர் என்னை ஆட்டிப்படைக்கவும் இல்லை - பிராபோவோ
- S.KUMARA
- Nov 7, 2025
- 1 min read

ஜக்கார்த்தா - தாம் முன்னாள் அதிபர் ஜோக்கோ விடோடோவின் ஆழுமையில் இருப்பதாகவும், அவருக்கு பயந்து ஆட்சி நடத்துவதாகவும் பரவிவரும் செய்திகள் வதந்தி, அது உண்மையல்ல என்று அதிபர் பிராபோவோ சுபியாந்தோ உறுதிபடுத்தினார்.
அதுமட்டுமின்றி, தம்மை ஜொக்கோவிக இன்றும் ஆட்டிப்படைப்பதாகவும் கூறப்படும் வதந்தியும் உண்மையல்ல, மாறாக நாங்கள் இருவரும் இன்றும் சிறந்த நண்பர்களாக இருக்கிறோம் என்று சொன்னார்.
"இதுவரை ஜோக்கோவி என்னிடம் எதுவும் தனக்கென கேட்டதில்லை. ஆகவே அப்படி இருக்கையில் நான் ஏன் அவருக்கு ஐயுர வேண்டும், அவர் (ஜோக்கோவி) எனது உயிர் நண்பர்," என்று இங்குள்ள பெந்தெனில் புதிய தொழிற்சாலையை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசினார்.
.
அதுமட்டுமின்றி, பிரபோவோ 10 ஆண்டுகால ஜோக்கோவியின் ஆட்சியில் உள்ள பொருளாதார வளர்ச்சி திறமையைப் பாராட்டிப் பேசினார்.
மேலும், தென் கொரியாவின் பெட்ரோலிய ரசாயன உற்பத்தி வசதி கட்டுமானத் திட்டம் ஜோக்கோவி ஆட்சிகாலத்திலேயே தொடங்கிவிட்டதாகக் தெளிவுபடுத்தினார்.
இத னிடையே, அரசியல் தலைவர்கள் பதவியில் இல்லாத பொது தூற்றப்படுவதும், ஆட்சியில் உள்ளபோது போற்றப்படும் கலாச்சாரம் குறித்தும் அவர் கவலை தெரிவித்துக்கொண்டார்.





Comments