டுரியான் விற்பனையாகாத மன உளைச்சலால் வியாபாரி மரணம்
- kumara885
- Nov 5, 2025
- 1 min read

மலாக்கா - இங்குள்ள முள்நாறிப்பழ வியாபாரி ஒருவர், தனது பழ வியாபாரம் கடந்த சில நாட்களாக தொய்வு அடைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி இறுதியில் உயிரை மாய்த்துக்கொண்டார்.
நேற்று, அந்நபர் இங்குள்ள பிளாசா மலாக்கா ராயா எனும் பேரங்காடியினதிற்கு ஓட்டிச் சென்று நநாநான்காவது மாடி கார் நிறுத்தும் இடத்தில் இருந்து கீழே குதித்து இறந்ததாக காவல் துறை உறுதிபடுத்தியுள்ளது.
த்மதியம் 12.30 மணிக்கு நடந்த இவ்விபத்தில் 23 வயதுடைய வாலிபர் இரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த நிலையில், அங்கு விரைந்த மலாக்கா ப்ரிய மருத்துவமனை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட அந்த நபர் இறந்துவிட்டார் என்று உறுதி செய்தனர் என்று மலாக்கா தெங்கா மாவட்ட காவல் துறை தலைவர் உதவி ஆணையர் கிரிஸ்டோபர் பாதிட் கூறினார்.
இறந்தவரின் காதலி கூறியதாவது, அந்த வாலிபர் இறப்பத்அற்கு முன் இருவரும் கோத்தா லக்சாமனாவிலுள்ள உணவகத்திற்கு சுமார் மதியம் 12 மணியளவில் ஒன்றாக சாப்பிடச் சென்றுள்ளனர்.
“கடந்த நான்கு நாட்களாக, புக்கிட் சீனாவில் தமது டுரியான் வியாபாரம் சரிந்துவிட்டதாக இறந்த வாலிபர் வருத்தத்தோடு கூறியுள்ளார் என்றும் மதிய உணவுக்கு அவர் எதுவும் சாப்பிடாமல் வீட்டிற்கு உணவை எடுத்துச் செல்ல முடிவெடுத்தார்," என்று அப்பெண் கூறியுள்ளார்.
“பிறகு அந்த மன உளைச்சளுக்கு ஆளான ஆடவர் தனது நான்கு சக்க்கர தொயோத்தா ஹைலக்ஸ் ரக காரை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஓட்டிச் சென்று நான்காவது மாடியில் நிறுநீர் கழிப்பதற்காக நிறுத்திவிட்டு அங்கிருந்து கீழே விழுந்து இறந்துள்ளார்," என்றார் அவர்.
மேற்கண்ட விசாரனையில், அவ்வாடவருக்கு மூன்று குற்றங்கள் புரிந்த பின்னணி இருந்துள்ளது.
“பிணத்தை மீட்ட இடத்தில் போலிசாரும் தடவியல் நிபுனர்களும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
"மேலும் இறந்தவரின் உடலில் எந்த ஒரு சந்தேகத்துக்குறிய காயங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், கஅவல் துறை இச்சம்பவத்தை திடீர் மரணமாக விசாரித்து வருகின்றனர்," என்று மேலும் சொன்னார்.





Comments