top of page

திங்கள்கிழமை எஸ்பிஎம் பொதுத் தேர்வு ஆரம்பம்

  • kumara885
  • Nov 1, 2025
  • 1 min read
திங்கள்கிழமை எஸ்பிஎம் பொதுத் தேர்வு தொடக்கம்
திங்கள்கிழமை எஸ்பிஎம் பொதுத் தேர்வு தொடக்கம்

புத்ராஜெயா- எதிர்வரும் திங்கள் நவம்பர் 3ஆம் நாள் நாடு முழுவதும் மொத்தம் 413,372 ஐந்தாம் படிவ மாணவர்கள் 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் பொதுத் தேர்வை எழுதவிருக்கின்றனர்.


இதற்காக மொத்தம் 3.350 தேர்வு எழுதும் மையங்கள் நாடுமுழுவதும் தயார் நிலையில் இருப்பதாக இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கல்வி அமைச்சு கூறியுள்ளது.


இதனிடையே மலாய் மொழி உரையாடல் தேர்வு நவம்பர் 3 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும்.மேலும் ஆங்கில மொழி உரையாடல் தேர்வு நவம்பர் 10 முதல் 13ஆம் நாள் வரை நடைபெறும்.


"அரிவியல் அமாலி தேர்வு நவம்பர் 17 முதல் 19ஆம் நாள் வரையில் நடத்தப்படும் என்றும் ஆங்கிலம் மற்றும் மலாய் கேட்டல் தேர்வு நவம்பர் 20ஆம் நாள் நடைபெறும்.


"இதர முக்கியத் தேர்வுகள் நவம்பர் 25ஆம் நாள் தொடங்கி டிசம்பர் 23ஆம் நாள் வரை நடைபெறும்," என்று கல்வி அமைச்சு அவ்வறிக்கையில் மேலும் சொன்னது.


இந்த பொதுத் தேர்வு சிறப்பான முறையில் தங்கு தடைகள் இன்றி நடைபெற நாடு முழுவதும் மொத்தம் 127,526 கண்காணிப்பு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுவர்.


ஒவ்வொரு தேர்வு தாள்களின் நடைபெரும் நாள், நேரம் தேர்வுத் தாழின் பெயர் ஆகியவற்றை மாணவர்கள் தேர்வு இலாகாவின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான lp.moe.gov.my.வழி பதிவிரக்கம் செய்துகொள்ளலாம்.


Comments


bottom of page