தீபாவளி முன்னிட்டு சுமார் 2.2 மில்லியன் வாகனங்கள் 17,18, 21 தேதிகளில் நெடுஞ்சாலையில் இருக்கும்
- kumara885
- Oct 17, 2025
- 1 min read

கோலாலம்பூர், அக்டோபர் 16 - தீபாவளி கொண்டாட்டம், கூடுதல் பள்ளி விடுமுறையை முன்னிட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் 17,18 21ஆம் தேதிகளில் சுமார் 2.2 மில்லியன் வாகனங்கள் கடக்கும் என்று பிலாஸ் நிறுவனம் எதிர்ப்பார்க்கின்றது.
இதனால் மக்காளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்குடன் அதிகபட்ச சாலை நெரிசலை எதிர்கொள்ள அந்நிறுவனம் தயாராக இருப்பதாக இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு கேட்டுகொள்கிறோம்.
"கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து பயணத்தைத் தொடங்கும் வாகனமோட்டிகள் பயண அட்டவனையை நன்கு திட்டமிடுவது சிறப்பு, பெருநாளுக்குப் பிறகு திரும்பும்பொழுது பயணத்தை பாதுகாப்பானதாக இருப்பதை கவனம் கொள்ள வேண்டும்," என்று அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
நெரிசலை எதிர்கொள்ள பிலாஸ் நெடுஞ்சாலையில் விகேக பாதையை 28 இடங்களில் திறந்துவிடும், இதனால் சாலை நெரிசலின்றி, வாகனங்கள் பாதுகாப்பாக செல்ல வகைசெய்யுமென்று மேலும் கூறியது.





Comments