தீபகற்பத்தில் உள்ள சபா குடிமக்களுக்கு தபால் வாக்களிக்கும் உரிமையைக் கொடு
- kumara885
- Oct 31, 2025
- 1 min read

கோத்தாகினபாலு- இங்கு தீபகற்ப மலேசியாவில் தங்கி பணி புரியும் சபா மக்கள் எதிர்வரும் அம்மாநிலத்தின் 17வது சட்டமன்றத் தேர்தலில் தபால் வழி வாக்களிக்கும் சலுகையை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஸ்டார் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நடைமுறையில் இருக்கும் வெளிநாடுகளில் வசிக்கும் மலேசியர்களை அஞ்சல் மூ வாக்களிக்கும் சலுகை இதே தீபகற்பத்தில் பணிபுரியும் சபா மக்களுக்கு வழங்காதது நீதியான ஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானது என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் அன்வார் கானி சாடியுள்ளார்.
"தேர்தல் நேர்மையுடனும் நீதியுடனும் நடைபெறுவதை நாங்கள் விரும்புகிறோம், ஆகவே ஒவ்வொரு மலேசிய குடிமக்களுக்கும் சம உரிமை வாக்கு என்பது முக்கியம்.
"அவ்வகையில், அயல்நாடுகளில் உள்ள மலேசியர்கள் மட்டும் அஞ்சல் வழி வாக்களிக்கும் உரிமை உண்டு ஆனால் தீபகற்பத்தின் சபா மக்களுக்கு மட்டும் அந்த உரிமை வழங்கப்படாதது வேதனைக்குரிய விஷயம், கொஞ்சம் கூட நியாயம் அல்ல," என்று மேலும் சொன்னார்.
லண்டன், மெல்பர்ன் அல்லது சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள் அஞ்சல் வழி வாக்களிக்க உரிமையுண்டு ஆனால், கோலாலம்பூர், ஜோகூர் அல்லது பினாங்கில் உள்ள சபா குடிமக்களுக்கு இந்த சலுகை இல்லை, இது மிகவும் அபத்தமான ஒன்று.
"ஏன் இந்த வேற்றுமை, நாட்டின் எல்லையில் அவர்கள் வசிப்பதால் அவர்களின் வாக்கு முக்கியத்துவம் கிடையாதா?
" இந்த வேற்றுமைக் கொள்கை அபத்தமானது காரணம் அயல்நாட்டிலுள்ள மலேசியருக்கும் உள்நாட்டிலுள்ள சபா மக்களிடையே பிரிவு கோட்டினை ஏற்படுத்தியுள்ளன," என்றார்.
மேலும் இது சொகுசுக்குரிய விசயம் அல்ல மாறாக நீதி சார்ந்த விசயம். சபா மக்களுக்கு அஞ்சல் வாக்கு என்பது தனி வரவேற்போ அல்லது கவனிப்போ அல்ல மாறாக ஜனநாயக செயல்பாட்டில் சமமான பங்கேற்பை ஏற்படுத்தித் தருவதாகும் என்று மேலும் நினைவூட்டினார்.
இந்த தபால் வாக்கு சலுகை வேறுபாட்டினால் தீபகற்பத்தில் பணிபுரியும் சுமார் 3 லட்சம் சபா வாக்காளர்கள் விமான பயண டிக்கெட் விலை உயர்வால் சபாவிற்குத் திரும்பி வாக்களிக்க முடியாமல் போகலாம்.
தீபகற்பத்தில் வாழும் சபா மக்க தபால் மூலம் வாக்களிக்கும் உரிமை பெற்றால் அது வாக்காளர்களின் விழுக்காடு அதிகரிப்பது மட்டுமின்றி நாட்டின் தேர்தல் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும் என்பது திண்ணம் என்றார்.





Comments