top of page

திருமண விருந்தில் இறைச்சிக்கறியைத் திருட வந்தவனுக்கு அடி உதை

kumara885
Oct 31, 2025
1 min read

திருமண விருந்தில் இறைச்சிக்கறியைத் திருட வந்தவனுக்கு அடி உதை


ஜக்கார்த்தா - அறிமுகம் இல்லாத நபர் ஒருவார் அழையா விருந்தாளியாக ஒரு திருமண விருந்து வைபவத்தில் நுழைந்தது மட்டுமின்றி அங்கே விருந்தினருக்காக சமைத்து வைத்திருந்த இறைச்சிக்கறி உணவைத் திருட முயன்ற ஆடவன் கையும் களவுமாக பிடிபட்டு அடி உதைக்கு ஆளானான்


இந்த ருசீகரச் சம்பவம் இங்குள்ள பண்டோங்கிலுள்ள மேற்கு ஜாவா பிராந்தியத்தில் ஒரு திருமண வைபவத்தில் நடந்தேறியது.


சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் வந்த அந்த அழையா விருந்தாளியான அறிமுகமற்ற ஆடவன் தான் உடன் கொண்டுவந்த உணவு பாத்திரத்தில் திருமணத்தில் சமைத்த மாமிச உணவை அள்ளி வைத்து அதனை கைப்பையினுள் மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியேறமுற்பட்டான்.


" ஆனால் இதனை உணர்ந்த மக்கள் மற்றும் இந்தோனேசிய இராணுவ அதிகாரிகள் அவனைச் சுற்றி வளைத்தனர்.


" அவன் கைப்பையில் சோதனையிட்டு திருடிய உணவை வெளியே எடுத்ததோடு. அந்த நபரைக் கடுமையாகத் திட்டி அவனுடைய காலில், மோட்டார் சைக்கிளில் பலமுறை உதைத்துள்ளனர்.


"இந்த ஆடவனின் நிலைமையைக் கண்ட சிலர் பரிதாபத்தோடு உணவுக்காக ஏன் அவனை உதைக்க வேண்டும், திருடிய உணவுக்கான நஷ்டத்தைச் சொல்லுங்கள், நாங்கள் பணம் தருகிறோம் அவன் பசி தீர உண்ணட்டும்," என்று கண்ணீரோடு கூறியுள்ளனர்.


Comments


bottom of page