தைவான் பெண் கொலை: ராப் பாடகர் நாம்வி தடுப்புக் காவல் நீட்டிப்பு
- S.KUMARA
- Nov 10, 2025
- 1 min read

கோலாலம்பூர் - தைவான் பெண்மனி ஒருவர் தலைநகரிலுள்ள ஓட்டலில் பிணமாகக் கிடந்த சம்பவத்தில் உள்ளூர் ராப் பாடகரான நாம்வி எனும் நபருக்கு எதிரான தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய தகவலை கோலாலம்பூர் மாநகரத்தின் காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஃபாடில் பார்சுஸ் உறுதிப்படுத்தினார்.
வீ மெங் சீ எனும் 42 வயதுமிக்க அந்த நபர் இதற்கு முன் கடந்த ஆறு நாட்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட வேளையில், காவல் துறை தடுப்புக் காவலை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்துள்ளது.
"நாம்விக்கு மேலும் மூன்று நாட்கள் தடுப்புக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது,
"அவ்வகையில் எதிர்வரும் வியாழன் 13ஆம் நவம்பர் வரை அந்நபர் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்படுவார்," என்று அவர் மேலும் கூறினார்.
இதற்கு முன் தீடீர் மரணமாக பிரகடனப்படுத்தப்பட்ட அப்பெண்ணின் மரணம் கடந்த அக்டோபரில் காவல் துறை அதனை கொலை குற்றமாக விசாரணையை முடக்கிவிட்டது.
மேலும் அப்பெண் கொலையுண்டதாக சந்தேகிக்கப்படுவதால், சம்பவத்தின் போது அப்பெண்ணின் அறையில் ஒன்றாக தங்கியிருந்த கடைசி நபர் என்ற அடிப்படையில் நம்வி போலிசாரால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செக்ஷன் 302 குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டுவரும் இச்சம்பவத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், கொலையாளிக்கு மரண தண்டனை அல்லது 40 ஆண்டுகளுக்கும் மேல் போகதா அதிகபட்ச சிறை விதிக்கப்படும்.





Comments