top of page

நாட்டின் பெண் பூப்பந்து இரட்டையர் ஜோடி உலகவரிசையில் முதலிடம்

S.KUMARA
Nov 7, 2025
1 min read


கோலாலம்பூர் - நாட்டின் முதன்மை பெண் இரட்டையர் பூப்பந்து ஜோடியான பெர்லி தான்-தீனா உலக பூப்பந்து தர வரிசையில் முதலிடம் பிடித்து சரித்திரம் படைத்துள்ளனர்.


இதற்கு முன்னர், அந்த இடத்தை சீனாவின் ஜோடியான ஷெங் ஷு - தான் நிங் இனையினர் கைவசம் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர்களின் சாதனையை மலேசியர்கள் உட்பட உலக பூப்பந்து விமர்சகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.


உலக பூப்பந்தின் இரண்டாம் நிலை வேற்றியாளர்களான பெர்லியும் தீனாவும் மொத்தம் 104,860 புள்ளிகளைப் பெற்று சீனா இணையை ஓரங்கட்டினர்.


அந்த சீன இணை வெறும் 103,150 புள்ளிகளையே பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த சாதனையானது நாட்டின் இரட்டை பெண் ஜோடி டிசம்பர் 17 தொடங்கி 21ஆம் திகதிவரை ஹங்சோவில் நடைபெறவிருக்கும் இறுதி சுற்றுக்கு தகுதியை பிரகாசப்படுத்தியுள்ளது.


இருப்பினும், தற்போது நமது இரட்டையர் இன்னும் அதிகாரப்பூர்வமாக பட்டியலில் முதலிடத்திற்கு மாற்றப்படவில்லை, விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்கப்படுகிறது.


இதனிடையே அடுத்த ஜப்பான் பொது பூப்பந்து போட்டியில் சீன இணையினர் பங்கேற்காததால், பெர்லிக்கும் தீனாவுக்கும் மேலும் வெற்றியை பன்மடங்காக்க இது அரிய வாய்ப்பாக இருக்கிறது.


Comments


bottom of page