top of page

நேப்பாள அணியின் புதிய பயிற்றுனர் நியமனம் எங்கள் கவனத்தை பாதிக்கவில்லை

  • S.KUMARA
  • Nov 12, 2025
  • 1 min read

கோலாலம்பூர் - ஆசியக் கின்ன தகுதிச் சுற்றுக்கான ஆட்டத்தை முன்னிட்டு நேப்பாள அணியில் ஏற்பட்டுள்ள பயிற்ச்சியாளர் மாற்றம் தமது மலேசிய அணியின் முன்னேற்பாடுகளை பாதிக்கவில்லை என்று அதன் தலைமை பயிற்றுனர் பீட்டர் கிளாமொவ்ஸ்கி சூளுரைத்தார்.


எதிர்வரும் 16ஆம் திகதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடைபெறவிருக்கும் அந்த முக்கிய அட்டத்தில் ஹரிமாவ் மலாயா அணி மூன்று புள்ளியைப் பெறுவைதை முழு இலக்காக வைத்து பயிற்சி மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் சொன்னார்.


கடந்த அக்டோபர் அன்றூ நேப்பாள அணியின் பயிற்றுனர் மாட் ரோஸ் பதவி விலகியதை அடுத்து தற்போது ஹரி காட்கா எனும் புதிய பயிற்றுனரை அவ்வணி பெற்றுள்ளது.


நேப்பாள அணி தற்போது புதிய பயிற்றுனரின் வழிகாட்டலில் பயிற்சியை மேற்கொண்டுவருவதால், எந்த விதமான ஆட்டத்தை நேப்பாளம் வெளிப்படுத்தும் என்ற கேள்வி காற்பந்து ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


உலகத் தர வரிசையில் 180 இடத்தில் இருக்கும் நேப்பாளம் இவ்வார இறுதியில் எவ்வாறான அட்டத்தை வெளிப்படுத்தும் என்பதை கணிக்க முடியாது.


ஆனால் மலேசியா அணி இந்த மாற்றத்தால் எந்த ஒரு விளைவையும் எதிர்கொள்ளாது என்று பீட்டர் மேலும் சொன்னார்.


"என் அணி நேப்பாள அணியின் விளையாட்டின் முறை மாற்றம் குறித்து அதிக கவனம் செலுத்தவில்லை.


"நேப்பாள அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது திடலில் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி மூன்று புள்ளிகளைப் பெறுவதே தற்போது முக்கியம்.


"எதிரணியினர் எப்படிப்பட்ட ஆட்டத்தை ஆடுவார்கள் என்று யோசிக்க எங்களுக்கு நேரம் கிடையாது, எங்களின் இலக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மூன்று புள்ளிகளைப் பெறுவதுதான்." என்றார்.




Bagaimanapun, Cklamovski menegaskan fokus utama pasukannya bukan terhadap perubahan lawan, sebaliknya memastikan setiap pemain Harimau Malaya berada pada tahap persediaan terbaik untuk menghadapi sebarang kemungkinan.


Comments


bottom of page