top of page

பெட்ரோல் நிலையத்தில் சுட்டுகொல்லப்பட்ட நபர் சொஸ்மா பின்னணியுடையவர்

  • Editorial
  • Nov 11, 2025
  • 1 min read
கிள்ளானில் சுட்டுக்கொல்லப்பட்டவர் சொஸ்மா குற்றப்பின்னணியுடன் பொலீசால் தேடப்பட்ட நபர்
கிள்ளானில் சுட்டுக்கொல்லப்பட்டவர் சொஸ்மா குற்றப்பின்னணியுடன் பொலீசால் தேடப்பட்ட நபர்

ஷாஆலாம் - கடந்த வாரம் கிள்ளான் புக்கிட் திங்கியிலுள்ள பெட்ரொல் நிலையத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவர் ஒருவர் போலிசாரால் தீவிரமாக தேடப்பட்டுவரும் நபர் என்பது தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தொடர் விசாரணையில், அந்நபருக்கு ஏற்கனவே சோஸ்மா குற்றப்பின்னணி உள்ளது என்று சிலாங்கூர் மாநில காவல் படைத் தலைவர் ஆணையர் டத்தோ ஷாசிலி காஹார் உறுதிபடுத்தினார்.


இங்குள்ள சிலாங்கூர் மாநில போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு கூறினார்.


இரந்த அந்த ஆடவரின் சடலம் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர் நெஞ்சிலும் வயிற்றிலும் தோட்டாக்கள் சரமாரியாக துளைத்ததால் அவ்விடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவ உடற்கூறு அறிக்கை உறுதிப்படுத்தியதாக அவர் மேலும் சொன்னார்.


தற்போது, பிரேத பரிசோதனைக்குப் பிறகு சடலம் இறுதி சடங்கிற்காகவும் தகனம் செய்வதற்காகவும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.





Comments


bottom of page