பெண் தொலைந்த மர்மம், பேரங்காடி காரினுள் பிணமாக கண்டெடுப்பு

கூச்சிங் – கடந்த சனிக்கிழமையன்று மர்மமான முறையில் காணாமல் போன பெண்மனி ஒருவார் நேற்று பேரங்காடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரினுள் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இச்சம்பவம் கூச்சிங் நகர மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் சுமார் 1.55 மணிக்கு பொதுமக்களிடமிருந்து பெண் ஒருவர் காரினுள் இறந்து கிடப்பதாக காவல் துறை தகவல் பெற்றது என்று கூச்சிங் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் அலெக்சொன் நாகா ச்சாபு கூறினார்.
இறந்த அப்பெண் 24 வயது மதிக்கத்தக்கவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
“கார் ஒட்டும் இருக்கையில் அப்பேண் சாய்ந்திருக்கும் நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட வேளையில், ஏற்கனவே இறந்துவிட்டதாக சரவாக் பொது மருத்துவமனையின் பாராமெடிக் அதிகாரி உறுதிப்படுத்தினார்.
"இறந்த இப்பெண் தபுவான் ஜெயாவில் இதற்கு முன் காணாமல் போனதாக தகவல் பெறப்பட்டது," என்று தமது அறிக்கையில் சொன்னார்.
தற்போது சவப் பரிசோதனைக்காக அப்பெண்னின் உடல் உடல்கூறு கூடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டதாக உறுதிபடுத்தினார்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அப்பெண்னின் உடலில் எந்த ஒரு குற்ற வன்முறை தடயமும் இல்லை என்று மேலும் உறுதிப்படுத்தினார்.





Comments