top of page

போதைபொருளால் வீட்டை எரித்த மகன், காயங்களுடன் உயிர் தப்பிய தாய்

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read
வீட்டை எரித்த மகன், உயிர்தப்பிய மூதாட்டி
வீட்டை எரித்த மகன், உயிர்தப்பிய மூதாட்டி

பெங்காளான் ஹூலு- போதைப் பொருள் உட்கொண்ட மயக்கத்தில் இருந்த ஆடவன் ஒருவன் வீட்டைத் தீயிட்டுள்ள சம்பவம் அவ்வட்டார மக்களிடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


அச்சம்பவத்தின்போது வீட்டுக்குள் இருந்த அவனது தாய் சொர்ப தீக்காயங்களுடன் உயிர் தப்பித்துள்ளார்.


இச்சம்பவம் இங்குள்ள கம்போங் செபெராங் குவாக் ஹூலுவில் நிகழ்ந்ததாக பெங்காளான் ஹூலு மாவட்ட காவல் துறைத்தலைவர் சூப்பரின்டெண்டன் சூல்கிப்லி இபுராகிம் உறுதிபடுத்தினார்.


"எங்கள் தகவல் மையம் அதிகாலை நேரம் 1.08 மணிக்கு வீடு தீப்பிடித்து எரியும் சம்பவம் குறித்து அவசர அழைப்பு பெற்றது.


" பெங்காலான் ஹூலு மற்றும் பாலிங் கெடாவிலுள்ள தீயணைப்பு படை சம்பவம் நடந்த இடத்திற்கு விரைவாக சென்றனர்.


" அதிகாலை 2.30 மணிக்கு தீயை அணைத்து கட்டுப்படுத்தினர்," என்றார் அவர்.


அச்சம்பவத்தில் 66 வயது மூதாட்டி தீக்காயங்களுடன் உயிர் தப்பினார்.


நேரம் தாழ்த்தாமல் அந்த மூதாட்டியை அலோர்ஸ்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.


இதனிடையே, இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த மூதாட்டியின் மகனான 24 வயது ஆடவனை போலீசார் கைது செய்துள்ளதாக அவர் உறுதிபடுத்தினார்.


மேற்கட்ட விசாரணையில் அந்த ஆடவன் போதைப்பொருள் உட்கொண்ட மயக்கத்தில் வேண்டுமென்றே வீட்டை எரித்துள்ளது தெரிய வந்துள்ளது.


காயமடைந்த தன் வயது முதிர்ந்த தாயுடன் வசித்து வந்த அந்த ஆடவன் நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


காவல் துறை இச்சம்பவத்தை செக்‌ஷன் 436 கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் மேலும் சொன்னார்.


Comments


bottom of page