top of page

பினாங்கு பெரிக்காத்தான் கூட்டணி தலைவராக டோமினிக் லாவ்வின் நியமனத்துக்கு எதிர்ப்பு

kumara885
Oct 29, 2025
1 min read
டோமினிக் லாவ்
டோமினிக் லாவ்

கோலாலம்பூர் - பினாங்கு மாநிலத்தின் பெரிக்காத்தான் நெஷனலின் தலைவராக கெரக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டொமினிக் லாவ்வை நிலைப்பெறச் செய்துள்ளது அவ்வட்டாரத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கனவே கடந்த பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி எந்த ஒரு தொகுதியிலும் வெல்லாமல் தோல்வி அடைந்ததால் அக்கட்சி மக்களின் நம்பிக்கை இழந்துவிட்டது என்றும் அவ்வகையில் டொமினிக் மாநில பெரிக்காத்தான் ஆலோசகராக இருப்பது சரியல்ல என்றும் சாடப்படுகிறது.


பாக்காத்தான் ஹரப்பானின் கூட்டணி கட்சியான அமானா டொமினிக்கின் நியமனம் பெரிக்காத்தான் கூட்டணியிலுள்ள பெர்சத்து, பாஸ் கட்சியின் பலவீனத்தைக் காட்டுவதாக சாடியுள்ளார்.'


பெரிக்காத்தான் நெஷனல் உச்சநிலை தலைவர்கள் அதன் அடிமட்ட உறுப்பினர்களின் வார்த்தைக்கும் உணர்வுக்கும் மதிப்பளிக்காமல் உதாசினப் படுத்துகிறது என்பதை டொமினிக் விவகாரத்தில் தெளிவாகக் காட்டுவதாக அமானா சாடியுள்ளது.


இந்த அதிருப்தி எதிர்ப்பை, பெரிக்காதானின் தலைவரான முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் செவிமடுத்து, அடிபடை உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




Comments


bottom of page