புயலில் சேதமடைந்த 4 பள்ளிகள் விரைந்து சீரமைக்கப்படும்
- kumara885
- Oct 17, 2025
- 1 min read

புத்ராஜெயா, அக்டோபர் 16- தெலுக் பங்லிமா காராங்கில் நேற்று நடந்த புயலில. சேதமடைந்த நான்கு பள்ளிக்கூடங்களைச் சீரமைக்கும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
தற்போது நான்கு பள்ளிகளிலும் ஏற்பட்ட சேதத்தின் அளவை அடையாளங்கண்டு வருவதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் கல்வி அமைச்சு குறிப்பிட்டது.
சிஜங்காங் ஜெயா இடைநிலை மற்றும் தேசியப் பள்ளி, கம்போங் மேடான் தேசியப் பள்ளி மற்றும் ஜாலான் தஞ்சோங் தேசியப் பள்ளிகளே சேதமுற்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
சேதமுற்ற பள்ளிகளின் சீரமைப்புப் பணிகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு விரைவில் அப்பள்ளிகள் மீண்டும் தங்களது கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மீண்டும் தொடங்க வகை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த மறுசீரமைப்புப் பணிகள் பூர்த்தியாகும் வரை நான்கு பள்ளிகளும் கற்றல் கற்பித்தலை வீட்டில் இணையம் வழி மேற்கொள்ளும் என்று கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியது.





Comments