பார்சலோனாவிற்கு தொடர்ந்து விளையாட ராஹ்போர்ட் விருப்பம்
- kumara885
- Oct 25, 2025
- 1 min read

பார்சலோனா- பிரபல லா லிகா காற்பந்து குழுவான பார்சலோனாவில் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு விளையாட அதன் இடைக்கால குத்தகை ஆட்டக்காரர் மார்கஸ் ரஷ்போர்ட் விருப்பம் தெரிவித்துள்ளர்.
உலகின் தலைசிறந்த காற்பந்து கிளப்பான மென்செஸ்சர் யூனைடெட்டின் முன்னணி ஆட்டக்காரரான அவர், தாம் பார்சலோனா அணிக்கு விளையாடி வருவது வாழ்வில் முக்கிய திருப்பமாகக் கருதுகிறார்.
தற்போது 27 வயதாகும் இங்கிலாந்து ஆட்டக்காரரான ராஷ்போர்ட் கடந்த ஆகஸ்ட் 2024ஆம் ஆண்டில் பார்சிலோனாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"எனக்கு இங்குள்ள சூழல் முகவும் கவர்ந்துள்ளது.
"காற்பந்தை நேசிப்பவர்களுக்கு இந்த பார்சிலோனா கிளப் உலக விளையாட்டு வரலாற்றில் அதிக ஆதிக்கமுடைய அணியாகும்.
" முன்னணி காற்பந்து வீரர் என்றவகையில் பார்சலோனாவிற்கு விளையாடுவது எனக்குக் கிட்டிய மிகப் பெரிய கௌரவமாகும்,"என்று ரஷ்போர்ட் கூறினார்.





Comments