top of page

பிரிட்டன் ரயிலில் கத்திக்குத்து சம்பவம்; 9 பேர் படுகாயம்

  • kumara885
  • Nov 4, 2025
  • 1 min read
லண்டனில் நடந்த கொலை தாக்குதலில் 9 பேர் படுகாயம்
லண்டனில் நடந்த கொலை தாக்குதலில் 9 பேர் படுகாயம்

லண்டன் - கடந்த சனிக்கிழமை இரவு இங்குள்ள ரயிலினுள் நிகழ்ந்த கத்திக் குத்து தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ள வேளையில் அதில் 9 பேர் படுகாயம்.


சம்பவத்தின் போது அந்த ரயில் டொன்செஸ்டர் நிலையத்திலிருந்து லண்டன் கீங்ஸ் குரோஸ் இடத்துக்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாக தகவல் அறியப்படுகிறது.


இச்சம்பவம் தொடர்பாக 2 சந்தேகத்துக்குரிய ஆடவர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக அனாடொலு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.


தீவிரவாத துடைத்தொழிப்பு அதிகாரிகளும் இந்த தாக்குதல் குறித்த காரணம் அறிய விசாரணைக்கு உதவுவதாக பிரிட்டன் போக்குவரத்து காவல் தெரிவித்துள்ளது.


சம்பவத்தை பார்த்த சட்சி பிபிசியிடம் கூறுகையில் கையில் இரத்தக் கரையுடன் ஒரு ஆடவன் இரயில் பெட்டியினுள் ஓடியவாறு "அவர்களிடம் கத்தி உள்ளது" என்று கத்தினான் என்றார்.


இச்சம்பவம் மிகவும் வேதனைக்குறியது என்று பிரதமர் கேயிர் ஸ்டஅர்மர் குறிப்பிட்டார்.


"சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் நான் வேதனை அடைகின்ற அதே வேளையில், மின்னல் வேகத்தில் தகவல் பெற்றதும் துரிதமாகச் செயல்பட்ட முதலுதவி குழுவை நான் வெகுவாகப் பாராட்டுகிறேன்," என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.


இதனிடையே உள்துறை அமைச்சர் ஷாபனா மாஹ்முட்டும் இச்சம்பவம் குறித்து தனது கவலையை எக்ஸ் தளத்தில் பதிவு செய்தார்.



Comments


bottom of page