top of page

பிரான்ஸ் பொதுப் பூப்பந்து: நாட்டின் களப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்

  • kumara885
  • Oct 24, 2025
  • 1 min read

பிரான்ஸ் பொது பூப்பந்து: நாட்டின் களப்பு இரட்டையர் காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்


கோலாலம்பூர் - தற்போது பிரான்சில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியில் நாட்டின் களப்பு இரட்டையர் ஜோடி தைவானை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.


கிளாஸ் அரெனாவில் நடைபெற்ற அப்போட்டியில் உலக வெற்றியாளர்களான சென் தாங் ஜீ-தோ ஈ வெய் ஜோடி தைவானின் யீ ஹொங் வெய்-நிகோல் சான் இணையை 22-20,17-21, 22-20 என்ற எண்ணிக்கையில் தோற்கடித்தனர்.


தைவான் ஜோடி மலேசிய இணைக்கு கடுமையான போட்டியை வழங்கி அட்டத்தை மூன்றாம் சுற்றுக்குக் கொண்டு சென்றனர்.


இருப்பினும் மூன்றாம் சுற்றில் எதிர் அணியை வீழ்த்த உலக தரவரிசையில் மூன்றாம் நிலை வகிக்கும் மலேசிய ஜோடி வெற்றியை உறுதி செய்ய கடுமையாக போராட வேண்டியிருந்தது.


Comments


bottom of page