பண்டார் காசியா டோல் சாவடி அருகே காரில் ஆடவர் சடலம்

பண்டார் காசியா டோல் சாவடி அருகே காரில் ஆடவர் சடலம்
பத்து கவான் - இங்குள்ள பண்டார் காசியா டோல் சாவடிக்கு அருகே நிருத்தப்பட்டிருந்த காரில் ஆடவர் ஒருவர் உயிரற்ற நிலையில் வியாழனன்று கண்டெடுக்கப்பட்டார்.
சுமார் மதியம் 4.10 மணிக்கு முதலுதவி அழைப்பைப் பெற்றதும் பத்து கவான் தீயணைப்பு மீட்புப் படை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு விரைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மீட்புப் படையின் உதவி இயக்குனர் ஜான் சாகுன் கூறினார்.
சுமார் 4.17 மணிக்கு சம்பவம் நடந்த இடத்தை அடைந்தபோது ஆடவர் ஒருவர் அசைவற்ற நிலையில் தொயோத்தா வியோஸ் ரக காரினுள் இருந்தார்.
"தீயணைப்புப் படையினர் பிறகு அசைவற்ற ஆடவரின் உடலை காரிலிருந்து வெளியே கொண்டுவந்தனர்.
"மேலும், பாதிக்கப்பட்ட ஆடவர் 43 வயதுடைய ஆண் என்றும் அவ்வாடவர் இறந்துவிட்டதாக சுகாதார ஊழியர்கள் அவ்விடத்தில் உறுதிபடுத்தினர்," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது அந்த ஆடவரின் சடலம் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக போலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.





Comments