பந்திங் பகுதியில் சுழல் காற்று
- kumara885
- Oct 15, 2025
- 1 min read

ஷா ஆலம் 15 அக்டோபர்– இன்று குவாலா லங்காட் மாவட்டத்தில் உள்ள பாந்திங் பகுதியில் அமைந்துள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் புயல் மற்றும் சுழல் காற்று ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.
இச்சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நிகழ்ந்த இடத்தில் பள்ளி பணியாளர்களில் ஒருவரால் பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் 40 வினாடி நீளமுள்ள ஒரு வீடியோவில், பள்ளியின் கூரைத் தகடுகள் உட்பட பல குப்பைகள் சுழல் காற்றில் பறந்துசெல்லும் காட்சி வைரல் ஆனது.
மற்றொரு வீடியோவில், பள்ளியின் கூரையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்து, பள்ளி பணியாளர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
அத்துடன், பள்ளி அருகே உள்ள சாலைகள் முழுவதும் குப்பைகள் நிரம்பியதும், மரங்கள் விழுந்திருப்பதும் போன்ற காட்சிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது, இச்சம்பவம் குறித்து குவாலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைமையகம் (IPD), குவாலா லங்காட் நகராட்சி (MPKL), மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புகள் அதிகாரப்பூர்வ உறுதிக்காக ஊடகங்கள் இன்னும் காத்திருக்கின்றன.





Comments