top of page

பவர் பேங்கை திருட்டு: சிறுவனை காயப்படுத்திய மூவர் கைது

  • kumara885
  • Nov 4, 2025
  • 1 min read
பவர் பேங்கை திருடிய சந்தேகத்தில் சிறுவனைத் தாக்கிய மூன்று ஆடவர்களை போலிசார் கைது.
பவர் பேங்கை திருடிய சந்தேகத்தில் சிறுவனைத் தாக்கிய மூன்று ஆடவர்களை போலிசார் கைது.



கோலாலம்பூர் - பவர் பேங்கஇ திருடியதாக குற்றம் சாட்டி சிறுவன் ஒருவனை கடுமையாகத் தாக்கி காயம் விளைவித்ததற்காக மூன்று ஆடவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இந்த கொடுமையான சம்பவம் தலைநகரிலுள்ள பிபிஆர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் உணவகத்தின் முன் நிகழ்ந்துள்ளதாக கோலாலம்பூர் தலைநகர காவல் துறைத் தலைவர் ஆணையர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்தார்.


சம்பவத்தின் போது 12 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுவன் மூன்று ஆசாமிகளில் ஒருவனின் நண்பனின் பவர் பேங்கை திருடியதாக குற்றஞ்சாட்டுக்கு உள்ளானான்.


"உடனே அந்த மூன்று சந்தேகத்துக்குரிய நபர்களும் அச்சிறுவனைக் கடுமையாகத் தாக்கி நெற்றியிலும் வாயிலும் காயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.


"காயமுற்ற அச்சிறுவன் தற்போது கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்," என்ற்ய் அவர் மேலும் சொன்னார்.


இச்சம்பவத்தைத் தொடர்ந்து போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில், இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் 49 முதல் 61 வயதுடைய ஆசாமிகள் கையும் களவுமாகப் பிடிபட்டனர்.


அம்மூவரும், கிளந்தானிலும் தலைநகரிலும் வெவ்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர்.


தற்போது காவல் துறை இந்த சம்பவத்தை செக்ச்யென் 323, 506 குற்றவியல் பிரிவின் கீழ் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.


"இச்சம்பவத்தின் விசாரனை அறிக்கை விரைவில் பூர்த்திசெய்யப்படு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறை அலுவலகத்துக்கு அனுப்பப்படும்," என்று சூளுரைத்தார்.


Comments


bottom of page