top of page

முகைதீன் தலைவர் பதவியைத் துறக்க வேண்டி செப்பாங் பெர்சத்து அழுத்தம்

kumara885
Oct 31, 2025
1 min read
முகைதீன் யாசின் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்
முகைதீன் யாசின் தலைவர் பதவியைத் துறக்க வேண்டும்

செப்பாங்- பெர்சத்து கட்சியினுள் ஏற்பட்டுள்ள உட்பூசல்களைக் களைந்து ஒற்றுமையை வலுப்படுத்த அதன் தலைவர் டான்ஶ்ரீ முகைதீன் யாசின் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று அக்கட்சிக்குள் இருந்து அழுத்தங்கள் வந்துள்ளன.


இந்த அதிருப்தியை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் கூறி வருவதோடு, தலைவர் முகைதீன் யாசினுக்கு கட்சியினுள் ஆதரவு மோசமாக சரிந்துள்ளதாகவும், கட்சியினுள் ஏற்பட்டுள்ள உட்பூசலை கையாளத் தெரியாத நிலையும் உருவாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.


"தற்போது கட்சிக்குள் முகைதீனுக்கு ஆதரவு கிடையாது, ஒருவேளை அவர் இப்போது வெளியேறினால் அது அவருக்கு கௌரவமான நடவடிக்கையாக இருக்கும்.


மேலும் அது அவரின் பதவி மோகம் இன்றி கட்சியின் ஒற்றுமை முன்னேற்றத்தை முன்னிறுத்தி எடுத்த பெருந்தன்மையான முடிவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.


அப்படி தலைவர் பதவியை விட்டு முகைதீன் வெளியேறாமல் அடம்பிடித்தால் அது கட்சியினுள் பிளவினை ஏற்படுத்துவதோடு எதிர்ர்வரும் பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான்ன் நெஷனல் வலுவிழக்க நேரிடும்.


“அவர் மேலுள்ள வெறுப்பால் நாங்கள் அவரை கட்சி தலைவர் பதவியைத் துறக்க சொல்லவில்லை மாறாக கட்சியை மறுசீரமைத்து உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஒழுங்குப்படுதவே இந்த நடவடிக்கை அவசியம்.


ஆகவே கட்சி மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் நலன் கறுதி முகைதீன் பதவி துறப்பார் என்று நம்புவதாக அக்கட்சியின் நம்பத்ய்ஹகுந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.


Comments


bottom of page