top of page

முகநூலில் அடிக்கடி புகைப்படத்தை பதிவிட்ட மனைவிக்கு அடி உதை

  • Editorial
  • Nov 12, 2025
  • 1 min read

தென் சுமாத்திரா – முகநூலில் அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவெற்றம் செய்து வந்த மனைவின் செயலால் பொறமை கொண்டு ஆத்திரமடைந்த கணவன் அடித்து உதைத்து காயம் விளைவித்துள்ளார்.


இந்த ருசீகர சம்பவம் இங்குள்ள ஓகன் இலிர் இந்தோனேசியாவில் நிகழ்ந்துள்ளது.


சமொஅவம் நிகழ்ந்த அதே நாளில் 53 வயதுடைய அந்த ஆடவரை போலிசார் கைது செய்தனர்.


அந்த நபர் தனது 51 வயதுடைய மனைவியை கடந்த அக்டோபர் 30ஆம் நாள் அவர்களின் வீட்டில் தாக்கி காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


உள்ளூர் மக்கள் அப்பெண்ணிற்கு நடந்த கொடுமையை அறிந்ததும் அதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததும் அச்சம்பவம் காட்டுத் தீயாகப் பரவியது.


கைது செய்யப்பட்ட அந்த ஆடவர் தமது மனைவி அனுதினமும் முகநூலில் புகைப்படத்தை பதிவேற்றி வருவதை அறிந்ததும் ஆத்திரமடைந்துள்ளான்.


சம்பவத்தின் போது, அப்பெண் படுக்கையறையில் ஆமர்ந்து கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், அவளது கணவன் கைத்தொலைப்பேசியைத் தரும்படி கேட்டுள்ளான்.


"ஆயினும், கைத்தொலைப்பேசியை அம்மாது தர மறுத்ததால் கணவனுடன் கைகளப்பில் ஈடுபட்டதும் அப்பெண் முகம் வீங்கும் அளவிற்கு தாக்கப்பட்டுள்ளார்.


"அப்பெண் வலி டாங்க முடியாமல் உதவி கேட்டு கதறியதும், அண்டை வீட்டில் உள்ளவர்கள் உடனே விரைந்து வந்து அப்பெண்னைக் காப்பாற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


Comments


bottom of page