மாணவி கூட்டு பலாத்காரம், 5ஆம் படிவ மாணவர்கள் கைது
- kumara885
- Oct 13, 2025
- 1 min read

மலாக்கா 12 அக்டோபர்- இங்குள்ள அலோர்காஜாவில் இருக்கும் இடைநிலைப் பள்ளி மாணவி ஒருவர் சக சீனியர் மாணவர்களால் கூட்டு பலாத்கார கொடுமைக்கு உள்ளாகிய சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 வயதுடைய மூன்றாம் படிவம் பயிலும் அம்மாணவிக்கு இந்த வன்கொடுமையைப் புரிந்த நான்கு ஐந்தாம் படிவ மாணவர்களை போலிஸ் கைது செய்துள்ளது.
அந்த நான்கு மாணவர்களும் அடுத்த மாதம் எஸ்பிஎம் தேர்வை எழுதவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தகவலை உறுதிபடுத்திய மலாக்கா காவல் துறைத் தலைவர் டத்தோ சுல்கய்ரி முக்தார், தற்போது கைதான மானவர்கள் தற்போது ஆறு நாள் விசாரணைக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள்தாகக் கூறினார்.
இச்சம்பவம் சுமார் பிற்பகல் 2.50 மணிக்கு பாதிக்கப்பட்ட மாணவி மூன்றாம் மாடியிலுள்ள தனது வகுப்பில் இருக்கும் அறிவியல் பாடப் பொருட்களை எடுக்க திரும்பிச் செல்லும் தருணத்தில் இக்கொடுமை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
அம்மாணவி வகுப்பை அடைந்ததும் 17 வயதுடைய இரு மூத்த மாணவர்கள் கதவு பின்புறம் ஒளிந்திருப்பதை உணர்ந்துள்ளார்.
அறிவியல்பொருட்களை எடுத்துக்கொண்டு அம்மாணவி படியில் இரங்க முற்ப்பட்டபோது திடீரென முதல் சந்தேகத்துக்குரிய மாணவன் பின்புறமிருந்து அந்த மாணவியின் கையை இருகப் பற்றி வாயை அடைத்து படியினருகே இருந்த அவள் வகுப்பறைக்குள் தள்ளியதாக நம்பத்தகுந்த வட்டாரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
மேலும் இன்னொரு மாணவன் படியில் காவல் காத்திருக்க 17 வயதுடைய மற்ற இரு மாணவர்கள் வகுப்பில் நுழைந்து முதல் சந்தேகத்திற்குரிய மாணவன் அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி வழுக்கட்டாயமாக கர்ப்பழித்துள்ளதோடு இரண்டாவது மாணவனும் அம்மாணவியிடம் அதே கொடுமையைப் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி மூன்றாவது மாணவன் இந்த அருவருப்பான செயலை கைத்தொலைபேசியின் மூலம் பதிவு செய்ததும் அம்பலமாகியுள்ளது.
தாயின் உதவியுடன் அம்மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்த வேளையில் பலாத்காரத்தில் ஈடுபட்ட சந்தேகத்திற்குரிய நான்கு மாணவர்களும் கைதாகினர்.
தற்போது இச்சம்பவத்தை போலிசார் செக்ஷன் 375B கீழ் விசாரனையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.





Comments