மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக படிவம் இரண்டு மாணவன் கைது
kumara885
Oct 17, 2025
1 min read

ஷா ஆலம் அக்டோபர் 17- பள்ளி மாணவியிடம் பாலியல் தொந்தரவு செய்த சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறை இரண்டாம் படிவ மாணவனை விசாரணைக்காக கைது செய்துள்ளனர்.
அந்த 14 வயதுடைய சந்தேக நபர் சுங்கை பெசார் சாலை ஓரத்தில் கைது செய்யப்பட்டதாக சபாக் பெர்னாம் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்ரின்தெண்டன் முகமது யூசொப் அகமது கூறினார்.
தற்போது அம்மாணவனை நான்கு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் போலிசுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அம்மாணவன் கடந்த அக்டோபர் 13ஆம் தேதியன்று காலை 9.30 மணிக்கு ஓய்வு நேரத்தின் போது சபாக் பெர்னாமில் உள்ள ஒரு பள்ளியில் இந்த அருவருக்கத்தக்க செயலைச் செய்ததாகத் தெரியவந்துள்ளது.





Comments