top of page

மைத்துனரை தலைத் துண்டாகும் வரை வெட்டிய ஆடவன் கைது

  • kumara885
  • Nov 4, 2025
  • 1 min read
சொந்த மைத்துனரை தலை துண்டாகும் வரை வெட்டி கொலை செய்த ஆடவன் கைது
சொந்த மைத்துனரை தலை துண்டாகும் வரை வெட்டி கொலை செய்த ஆடவன் கைது


அலோர்ஸ்டார் - சொந்த மைத்துனரையே தலை துண்டாகும் வரை வெறித்தனமாக வெட்டிக் கொலை செய்த ஆடவன் ஒருவான் தற்போது விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.


இந்த செஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் ஞாயிரன்று ஜெர்லுன் கம்போங் பீடா 3 வயல் வெளியில் நிகழ்ந்ததாக குபாங் பாசு மாவட்ட காவல் துறைத் தலைவர் சூப்பரிந்தென்டன் முகம்மது ராட்சி அப்துல் ரஹ்மான் கூறினார்.


கொலை செய்த அந்த ஆசாமி தடுப்பு காவலுக்காக நேற்று நீதிமன்றத்துக்கு பலத்த காவலோடு கொண்டுசெல்லப்பட்டான்.


விண்ணப்பத்தை செவிமடுத்த மாஜிஸ்திரெட் சித்தி நோர் ஹஸ்லிசா முகம்மது அலி அந்த ஆசாமியை போலிசார் ஏழு நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க ஆணை பிரப்பித்தார்.


அந்த 38 வயதுமிக்க ஆடவன் செக்‌ஷன் 302 குற்றவியல் பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறான்.


குற்றம் நிரூபனமானால், மரண தண்டனை அல்லது அதிகபட்சம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும்.


தற்போது இறந்த ஆடவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அலோர்ஸ்டார் பெரிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்று முகம்மது ராட்சி மேலும் கூறினார்.


சம்பவம் நிகழ்ந்த இடத்தில் தடவியல் நிபுனர்கள் இறந்தவரின் உடலில் பல வெட்டுக்காயங்கள், கிட்டதட்ட 1 மீட்டர் துண்டான தலையையும் கண்டெடுத்தனர்.


சம்பவத்துக்கான உண்மையான நோக்கம் குறித்து விசாரனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


சுமார் 15 நிமிட சமாதான பேச்சுக்குப் பிறகு கொலை செய்த ஆடவன் கையில் 30 சென்டிமீட்டர் அரிவாளுடன் போலிசாரால் சுமார் 30 மீட்டர் அருகே உள்ள அவனது இல்லத்தில் கைது செய்யப்பட்டான்.



Comments


bottom of page