top of page

முன்னாள் பிரதமரின் மருமகனின் பயணக் கடப்பிதழ் ரத்து

  • kumara885
  • Oct 24, 2025
  • 1 min read



கோலாலம்பூர் - முன்னாள் பிரதமரின் மருமகனுடைய பயணக் கடப்பிதழ் மலேசிய அரசாங்கத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்டது.


இந்தப் புதிய தகவலை உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மயில் புத்ராஜெயாவில் உறுதிப்படுத்தினார்.


மலேசிய லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு ஆணையம் சமர்ப்பித்த விண்ணப்பம் காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.


" இதற்கு முன்னர் டத்தோஶ்ரீ முகம்மது அட்லான் பெர்ஹானின் பயணக் கடப்பிதழை ரத்து செய்யக்கோரி மலேசிய லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு ஆணையம் விண்ணப்பித்ததாக மலேசிய குடிநுழைவுத் துறையின் மூலம் தெரிந்துகொண்டேன்.


"தற்போது அந்நடவடிக்கை (கடப்பிதழ் ரத்து) எடுக்கப்பட்டுவிட்டதென்று நான் இங்கே உறுதிபடுத்துகிறேன்,"என்று அவர் மேலும் கூறினார்.


தற்பொழுது தேடப்பட்டுவரும் அவ்வாடவரை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவர அரச மலேசிய காவல் படையும் குடிநுழைவுத் துறையும் உதவும் என்றார்.


"மலேசிய லஞ்ச ஊழல் துடைத்தொழிப்பு ஆணைய விசாரணைக்காக முன்னாள் பிரதமரின் மருமகன் தீவிரமாக தேடப்பட்டு வருகிறார்.


"இதனிடையே, கடப்பிதழ் ரத்து செய்யப்பட்ட பின்பும் எவ்வாறு அந்த ஆடவர் வெளிநாட்டில் சுதந்திரமாக நடமாட முடிகிறது என்பதையும் உள்துறை அமைச்சு தீவிரமாக விசாரிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.


Comments


bottom of page