top of page

முன்னாள் பிரதமரின் மருமகனைப் பிடிக்க கைது ஆணை -தேசிய போலிஸ் படைத் தலைவர்

kumara885
Oct 24, 2025
1 min read


கோலாலம்பூர் - லஞ்ச ஊழல் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக தீவிரமாகத் தேடப்பட்டுவரும் முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முகைதீன் யாசினின் மருமகனுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்படுவிட்டதாக அரச மலேசியக் காவல் படை இன்று கூறியுள்ளது.


தற்போது அவ்வாடவரை கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசிய காவல் படையின் தலைவர் டத்தோஶ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் உறுதிபடுத்தினார்.


மேலும். தேடப்பட்டுவரும் அந்த ஆடவர் தற்போது வட ஆசியா நாடு ஒன்றில் சொகுசு வாழ்க்கையுடன் சுதந்திரமாக நசமாடி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.


"அதன் காரணமாக அந்த ஆடவரைப் பிடிக்க கைது ஆணை பிறப்பிக்கப்பட்ட வேளையில் இப்பொது மேற்கண்ட நடவடிக்கைக்காக முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.


"அந்த நபரை கைது செய்து மலேசியாவுக்கு கொண்டுவருவதற்கு சம்பந்தப்பட்ட நாட்டின் ஒத்துழைப்பைப் பெற வேண்டியுள்ளது. ஆகவே, அல்லாவின் அருளால், நாங்கள் இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க பாடுபடுகிறோம்," என்று சூளுரைத்தார்.


ஆசியான் உச்சநிலை மாநாட்டின் முன்னேற்பாடுகளைப் பார்வையிட்டப்பின் அவர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.


Comments


bottom of page