top of page

மூன்று கார்கள் மோதிக்கொண்டதில் தாய், சேய் உயிரிழப்பு

  • kumara885
  • Oct 26, 2025
  • 1 min read


குளுவாங் - நேற்று இங்குள்ள ஜாலான் ஜோகூர் பாரு-ஆயெர் ஹித்தாம் சாலையில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில் தாயும் அவரது மகனும் சம்பவம் நடந்த இடத்திலேயே பலியாகினர்.


இந்த துயரச் சம்பவம் மாலை சுமார் 5 மணிக்கு நிகழ்ந்த வேலையில் ஒரு காரும்,வேனும் மற்றொரு காரும் பாதிக்கப்பட்டதாக குளுவாங் மாவட்ட காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் பஹ்ரின் முகம்மது நோ உறுதிபடுத்தினார்.


"சம்பவத்தின்போது 51 வயதுமிக்க அப்பெண்மனி தனது இரு மகன்களையும் ஏற்றிக்கொண்டு பெரோடுவா கஞ்சில் ரக காரில் சிம்பாங் ரெங்காமிலிருந்து கம்போங் புக்கிட் கெனாங்கான் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள்து.


அப்பெண் ஓட்டிசென்ற கார் சம்பவம் நிகழ்ந்த இடத்தை அடைந்ததும் வலது புறம் நுழைவதற்காக காத்திருந்தபோது திடீரென பின்னாலிருந்து வந்த மஸ்டா ரக தொழிற்சாலை வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பெண்ணின் காரின் பின்னால் பலமாக மோதியது.


இந்த மோதலால் அப்பெண்ணின் கார் எதிர் திசையில் உள்ள சாலைக்குள் புகுந்ததால் எதிரே மின்னல் வேகத்தில் வந்த நான்கு ஆக்கர வாகனம் ஒன்று அப்பெண்னின் காரின் மீது மோதியது.


இதனால். அப்பெண்ணும் முன் இருக்கையில் அமர்ந்திருந்த அவரது 15 வயது மகனும் தலையிலும் உடலிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழ்ந்தனர்," என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.


அப்பெண்ணின் ஒன்பது வயதான மற்றொரு மகன் இடது காலிலும் தலையிலும் காயத்துக்குள்ளானார்.


மேலும்,வேன் ஒட்டுநருக்கு முகம், செஞ்சுப்பகுதி மற்றும்வலது காலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.


காயத்துக்குள்ளான அனைவரும் உடனடி சிகிச்சைக்காக குளுவாங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.


Comments


bottom of page