மலேசிய காற்பந்து சங்க பொதுச் செயலாளரை நீக்கியது முறையல்ல- தெங்கு மாகோத்தா இஸ்மயில்
- kumara885
- Oct 26, 2025
- 1 min read

பெட்டாலிங் ஜெயா- மலேசியக் காற்பந்து சங்கம் அதன்பொதுச் செயலாளரை நீக்கியது சரியான முடிவல்ல என்று இடைக்கால ஜோகூர் சுல்தான் தெங்கு மாக்கோத்தா இஸ்மயில் முறையிட்டுள்ளார்.
நேற்று காற்பந்து சங்கத்தின் விஸ்மா கெளானா ஜெயாவில் நடைபெற்ற ஊடக ஆந்திப்பின் போது பேசினார்.
ஏழு பாரம்பரிய தேசிய விளையாட்டாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
"டத்தோ நோர் அஸ்மானை இடைக்கால நீக்கம் செய்துள்ளது தவறான முடிவு.
" உண்மையில் இந்த விவகாரத்தில் தேசிய காற்பந்து சங்கத்தில் உள்ள அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் முழு பொறுப்பேற்க வேண்டுமே தவிர அஸ்மானை தனியாகத் தண்டிக்கக் கூடாது," என்றார்.
அதேவேளையில் தாம் யாரையும் சுட்டிக்காட்ட விரும்பவில்லை என்ற அவர் இவ்விவகாரத்தில் முழுமையான தீர்வை எடுப்பதில் மும்முரமாக இருப்பதாகச் சூளுரைத்தார்.





Comments