மலேசிய காற்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவி நீக்கம்
- kumara885
- Oct 17, 2025
- 1 min read

பெட்டாலிங் ஜெயா அக்டோபர் 17- மலேசிய காற்பந்து சங்கம் இன்று அதன் பொதுச் செயலாளர் டத்தோ நூர் அஸ்மான் ரகுமானை பதவி நீக்கம் செய்துள்ளது.
அச்சங்கத்தின் இந்த அதிரடி முடிவு நாட்டின் காற்பந்து வட்டாரத்தில் பெறும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வன்மையான முடிவை அதன் துணைத் தலைவர் எஸ்.சிவசுந்தரம் விஸ்மா எப்ஏஎம் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புப் பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தார்.
நூர் அஸ்மானின் பதவி நீக்கம் இன்று முதல் உடனடி அமலுக்கு வருவதாக உறுதிப்படுத்தினார்.
இவரது பதவி நீக்கம் ஏழு பாரம்பரிய தேசிய விளையாட்டாளர்கள் தொடர்பான உலகக் காற்பந்து சம்மேளனத்திம் விசாரணையின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
" உலக காற்பந்து சம்மேளனத்தின் விவகாரம் தொடர்பில், மலேசிய காற்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் உடனடி பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், " என்று ரத்தினச் சுருக்கமாகக் கூறினார்.
தேசிய காற்பந்து சங்கம் அனைத்துலக காற்பந்து சம்மேளனத்திடமிருந்து பாரம்பரிய வெளிநாட்டு விளையாட்டாளர்களின் ஆவண தஸ்தாவேஜுக்கள் விதிமுறை மீரல் ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்பில் தகவல் பெறப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த விவேக நடவடிக்கை மூலம் எந்த ஒரு உள்தாக்கமின்றி விசாரணை நேர்மையாக வெளிப்படையாக மேற்கொள்ள வகை செய்யும் என்று நம்பப்படுகிறது.
இதற்கு முன் உலக காற்பந்து சம்மேளனம் மலேசிய காற்பந்து சங்கம் அடையாளம் கண்டு இறக்குமதி செய்த மலேசிய மூதாதையர்களின் ரத்த பிறப்பு தொடர்புடையா ஏழு அந்நிய விளையாட்டாளர்களை ஹரிமாவ் மலாயா அணியிலிருந்து இடைநீக்கம் செய்தது.
அவர்கள் அனைவரும் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்ற சந்தேகத்தால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதை அடுத்து மலேசிய காற்பந்து சங்கம் மேல்முறையீடு செய்துள்ளது.





Comments