top of page

மலேசிய சேப்பாக் தக்ரோவிற்கு உலகின் தலைசிறந்த விளையாட்டு கல்லூரி

  • kumara885
  • Oct 31, 2025
  • 1 min read
ஹன்னா யியோ
ஹன்னா யியோ

கோலாலம்பூர் - சேப்பாக் தக்ரோவின் முன்னோடியாக மலேசிய அணி தற்போது மிகப்பெரிய உறுமாற்றத்தைக் கடந்து செல்கின்றது.


இங்குள்ள கம்போங் பாருவில் மலேசிய சேப்பாக் டக்ரோ அகாடமி மேம்பாட்டிற்காக ஜாலான் ராஜா மூடா விளையாட்டு அரங்கு பெரிய அளவில் மேம்படுத்தப்படவிருக்கிறது.


சுமார் ரிம6 மில்லியன் நிதிச் செலவில் மேம்படுதப்படவிருக்கும் அவ்வரங்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் நிரைவு பெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


அரங்கு தயாரானதும் அனைத்து வசதிகளையும் கூடிய பயிற்சி மையமாக மட்டுமில்லாமல் ஆசியாவில் அல்லது உலகிலேயே முதல் பிரத்தியேக சேப்பாக் தக்ரோ அகாடமியாகத் திகழும் என்பது உறுதி என்று இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா யியோ கூறினார்.


"புதியதொரு அரங்கினை அமைப்பதைக் காட்டிலும் இவ்வாறு பயன்பாட்டில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், அதிக பொருட்செலவை கட்டுபடுத்தி பண விரயத்தைத் தவிர்க்க முடியும்.


" புதிய விளையாட்டு வசதிகளை அமைப்பதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை மாறாக பயன்பாட்டில் உள்ள பழைய விளையாட்டு அரங்கத்தை புதிய வசதிகளுடன் மேம்படுத்துவது இன்னும் சிறப்புக்குரியதாகும் காரணம் அஃது விவேகம் மட்டுமின்றி சிக்கனத்துக்குரிய காரியம் ஆகும்," என்று அதன் மேம்பாட்டு பணிகளைத் தொடக்கிவைத்தபின் செய்தியாளர்களிடம் பேசினார்.


தேசிய விளையாட்டு கல்லூரிக்குச் சொந்தமான நிலத்தில் மேற்கொள்ளப்படும் இந்தமேம்பாட்டுத் திட்டம் நிறைவுற்றதும் அவ்வரங்கம். மலேசிய சேப்பாக் தக்ரோ சம்மேளனத்திடம் மூன்று ஆண்டுகளுக்கு அடகுக்கு தரப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.


அவ்வரங்கம் புதுப்பிக்கப்பட்டதும் வாசிக்கும் அறை, ஜிம்னாசியம், விளையாட்டாளர்கள் தங்கும் விடுதி, பயிற்சி வளாகம் என அனைத்து அதிநவீன வசதிகள் இருக்கும் என்றார்.


Comments


bottom of page