top of page

மலேசியாவுக்கும் ஃபீஃபாவுக்கும் தர்ம யுத்தம் ஆரம்பம்

kumara885
Nov 5, 2025
1 min read

Updated: Nov 6, 2025

BARANAMA


கோலாலம்பூர் - ஏழு பாரம்பரிய விளையாட்டாளர்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அநீதியான முறையில் தண்டிக்கப்பட்டுள்ளதால் தற்போது மலேசிய காற்பந்து சங்கத்துக்கும் உலகக் காற்பந்து சம்மேளனத்துக்கும் இடையே தர்பயுத்தம் தொடங்கியுள்ளது.


மலேசிய காற்பந்து சங்கத்தின் தற்காலிக தலைவர் டத்தோ யூசொப் மஹாடி கூறியதாவது, மலேசிய தரப்பு ஆதாரம், அனைத்து உண்மை ஆவணங்களையும் தயார் செய்து விளையாட்டு தீர்வாய்வு நீதிமன்றத்தில் உலக சம்மேளனத்தின் முடிவை எதிர்த்து நீதிக்காக போராடும் என்றர்.


"உலக காற்பந்து சம்மேளனத்தின் இந்த அநீதியற்ற முடிவால் நங்கள் அமைதி காக்கப் போவதில்லை, மாறாக எங்களிடம் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி போராடுவோம் என்றார்.


இந்த, விவகாரத்தில் நாங்கள் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை காரணம் ஃபீஃபாவின் இந்த தீர்ப்பு அரசியல் நோக்கம் கொண்டதாக இருக்கிறது.


"இதற்கு நாங்கள் அடிபனியப் போவதில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து நீதிக்காக போராடுவோம்.


"எங்களுக்கு 21 நாள் கால அவகாசம் உள்ளது இந்த வழக்கை விளையாட்டு தீர்வுஆய்வு நீதிமன்றத்தில் நீதி பெற நாங்கள் முழுமூச்சாக எங்களுடைய சட்ட நிபுணர்களைக் கொண்டு போராடுவோம்," என்றார்.


இந்த வழக்கில் நீதி கிடைக்க சற்று தாமதமாகலாம் என்று அவர் மேற்கோள் காட்டினார்.


"இது எங்களுக்கும் ஃபீஃபாவுக்கும் நடக்கும் தர்ம யுத்தம், நாங்கள் இதனை எதிர்கொண்டு நீதியை நிலைநாட்ட தயாராக உள்ளோம் என்று மேலும் கூறினார்.

Comments


bottom of page