top of page

ரொனால்டோவின் 15 வயது மகனின் சொகுசு கார்

  • kumara885
  • Nov 2, 2025
  • 1 min read

ரொனால்டோவின் 15 மகனின்சொகுசு கார்


போர்த்துகல்- உலக காற்பந்து கோல் மன்னனாகத் திகழும் கிரிஸ்டியானோ ரொனால்டோவின் மூத்த மகன் தனது தந்தையின் சொகுசு கார் மீதான ஆர்வத்தைப் பின்பற்றி 15வயதில் தனது முதல் சொகுசு காரை வாங்கியுள்ளார்.


இந்தகவலை ரொனாட்லோ ஜெஆர் தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.


அந்தப் பதிவில் தாம் வாங்கிய லம்போர்கினி ஊருஸ் எஸ் ரக வெள்ளை சொகுசு காரை காண்பித்துள்ளது, சமூக ஊடகவியலாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.


தந்தை ரொனால்டோ முதன் முதன் முறையாக மென்செஸ்டர் யூனைடெட்டுக்கு விளையாடிய போது அவ்டி ரக காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


இருப்பினும் ரொனால்டோ மகன் வாங்கியுள்ள கார் இவ்வாண்டின் புதிய வெளியீடாக இருக்க வாய்ப்பில்லை மாறாக அஃது ரொனால்டோவின் சேகரிப்பின் ஒன்றைத் தன்மகனுக்கு அன்பளிப்பாக வழங்கியிருக்கக்கூடும் என்று பேசப்படுகிறது.


ரொனால்டோ மகன் தற்போது வைத்திருக்கும் லம்போர்கினி விலை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்தையில் விற்பனைக்கு வந்தப்பொது சுமார் £265,000 பவுண்ட் அல்லது ரிம1.28மில்லியன் என்று நம்பப்படுகிறது.


ஆயினும் சவுதி அரியவில் வாகன லைசன்ஸ் உரிமத்தின் வயது வரம்பு 18 என்பதால் ரொனால்டோ மகனால் தற்போதைக்கு அந்த வாகனத்தை ஓட்ட இயலாது.


ஆனால், 17 வயதில் ரொனால்டோ மகன் கார் ஓட்டும் பயிற்ச்சியை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Comments


bottom of page